பக்கம்:வீடும் வெளியும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 வீடும் வெளியும் இப்படி ஒரு தேவையை உண்டாக்கிய பிறகு, பண அறு வடை பண்ணுவதில் அவர் அக்கறை காட்டலானர். ஒரு பிரசங்கத்துக்கு இவ்வளவு பணம் வேண்டும் போகவரச் செலவுக்கு இவ்வளவு என்று குறிப்பிட்டு, முன் பணம் கோரிஞர். அப்படியே அனுப்பினர்கள் பல ஊர்க்காரர் நாளடைவில் பிரசங்கி புன்னைவனம் இந்தப் பிசின வில் லாபகரமான வழியைக் கையாளத் தொடங்கி விட் டார். வருகிறேன் என்று சொல்லி, முன்பணம் வாங்கி விடுவார். பிறகு அங்கே போகாமலே இருந்து விடுவார். நினேவு படுத்தும் கடிதங்கள், வேண்டுதல்கள். வசை மாரிகள் எவ்வளவுதான் வரட்டுமே. மன்னன் அசைய மாட்டார். காலச்சூறை, மழை வெயில் எதனுலும் பாதிக்கப்படாது நிற்கும் கருங்கல் பாறை போல் இருந்து விடுவார். அவரை யார்தான் என்ன செய்ய முடியும்? ஏசுவார்களா? காணுத் இடத்தில்-அவர் காதுக்கு எட் டாத தூரத்தில்-தானே ஏசிக் கொண்டிருப்பார்கள்: அப்படியே ஏசிப் பேசினுல்தான் அவருக்கு என்ன? ஏச்சு கள் அவரைத் தேய்த்து நசுக்கி விடுமா என்ன? ஆயிரம் திட்டு ஒரு ஆனைப்பலன் என்று எங்க தாத்தா சொல்லு வார்' என்று ஹாஸ்யம் வேறு பண்ணிக் களிப்பார் ஆகி:. அன்று சுந்தரமும் காந்தியும் திருவாளர் புன்னே வனத்தைச் சந்திக்கச் சென்ற சமயம், அவர் வீட்டின் முன்னே இரண்டு பேர் நின்ருர்கள். அவர்கள் வெகு நேரமாக அங்கே அப்படிக் காத்து நிற்பதாகத் தோன்றி யது. அவர்களும் சுந்தரத்திற்குப் பெரிதாகக் கும்பிடு போட்டு, பரிதாபகரமாகச் சிரித்தார்கள். "என்ன? எங்கே இப்படி இவ்வளவு தூரம்?' என்று காந்தரம் விசாரித்தார். அவர்கள் அழாத குறையாகப் புலம்பித் தீர்த்தார் கள். அவர்கள் ஊரில் ஒரு ஆண்டு விழாவுக்குச் சொற். பொழிவு ஆற்றப் புன்னைவனம் ஒப்புக்கொண்டிருந்தார். "ஐம்பது ரூபாய் கொடுத்தாயிற்று. இவர் வரவேயில்லே,