பக்கம்:வீடும் வெளியும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ベー வீடும் வெளியும் 盈、 புதுப் பணக்காரன், தேசப்பற்று, கட்சிப் பிடிப்பு எல்லா வற்றிலும் புது மோகமும்தான். அவருடைய போக்கு கள் வேறு தினுக. உங்கள் மனமும் நோக்கும் வேறு ரகம். அதேைலதான் சொல்கிறேன்' என்று தொண்டர் எடை போட்டு நிர்ணயம் செய்தது போல்’ பேசினுர், . శ 核 ? శ్ర 27. நாதனின் வேதனை தொண்டர் நாதனப் பற்றி எண்ணும் போ தல் லாம் காந்திக்கு இருவேறு உலகத்து இயற்கை, திருவேறு தெள்ளிய ராதல் வேறு' 5:ன்ற பொய்யா மொழியும் நினைவுக்கு வரும். சுந்தரம் போன்ற திருவின் தாசர்கள், பணத்தையும் புகழையும் மோகித்து எவ்வழியிலும் பெறுவதற்காக அலைகிறவர்கள், உயர்த்த பண்புகளையும் நல்ல நோக்கங்களையும் ஒதுக்கி விடுகிருர் கள். நல்லவர்களாக வாழ ஆசைப்படுகிற நாதன் போன்றவர்கள் செல்வச்சிறப்பு அடைய முடியாமல் அவ திப்படுகிருர்கள் என்ற உண்மை அவனே உறுத்தி வந்தது. "நாதன் ரொம்ப நல்லவராக வாழ முயல்கிறார். லட்சியவாதியாக நடந்து கொள்ள விரும்புவதும், கொள்கைகளே விட்டுக்கொடுக்க மனம் இல்லாமலிருப் பதும் சரிதான். ஆணுல், லட்சியத்துக்கோ கொள்கை களுக்கோ தீங்கு செய்யாத சில செயல் முறைகளை ஏற்றுக் கொண்டால் என்ன? அவர் மகாத்மாவின் பாஷையிலே பேச ஆரம்பித்து விடுகிருரே. என் அந்தராத்மா இடம் தரவில்லை; எனது அந்தராத்மா அதை அங்கீகரிக்க மறுக்கிறது என்ற தன்மையில் பேசி வேறு விளக்கம் தர அவர் மறுத்துவிடுகிருரே! இவ்விதம் காந்திமதிநாதன் நினைத்தான். தொண்டர் நாதனுடன் அவன் பேசிக்கொண்டிருந்த, போது, தியாகிகளுக்கு நிலம் தருகிற விஷயம் பற்றியும் குறிப்பிட நேர்ந்தது. நீங்கள் அதைப் பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து விட்டீர்களா?” என்று காந்தி அவரிடம் கேட்டான். o - - "என்னவோ எனக்கு அது பிடிக்கவில்லை. நான் தியாகி என்று பெரிய பெயர் பெற ஆசைப்படவில்லை;