பக்கம்:வீடும் வெளியும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 蕙魏 எங்கும் அமைதி நிறைந்து நின்றது. திருநகரில் இரவு எட்டரை ஒன்பது மணிக்கெல் , கனத்த அமைதி கவிந்துவிடும். சீக்கிரமே ஊர் அடங்கிவிட்டது போல் தோன்றும் வீதிகளில் வாகனங்க்ளி, யோக்கு வரத்தி ஏழுமணிக்கே குறைந்துவிடும். ஆள் ந_ _மும் இமதுமெதுவாகக் குறைந்து, தெருக்கள்த்ெ சென விளங்கும். சுந்தத்தின் வீடு இருந்த பகுதி ஊரின் ஒரு ஒரத்தில், ஒதுக்குப் புறமாக இருந்ததல்ை, இரவின் தனித்த சூழ்நிலை இதர வட்ட்ாரங்இன்விடத் சீக்கிர மாகவே புலனுகி விடும், இங்கு, காந்தி ஏழு ஏழரை மணிக்கே இரவு உணவை முடித் துக்கொண்டு தங்குமிடம் வந்துவிடுவான். இரவுச் சாப் பாடு என்று பெரிதாக எதுவும் கிடையாது. சில இட் டிவி களும் பாலும்தான். பிறகு வெகுநேரம் வரை படித்துக் கொண்டிருப்பான். தினசரி படுப்பதற்குப் பத்திரை , மணி ஆகிவிடும். அன்றும் அவன் படிப்பில் ஈடுபட்டிருந்தான். அதைக்கதவை யாரோ விரலால் 'டொக்,டொக்" என்று தட்டும் ஒசை கேட்டது. அவன் கவனித்தான். மீண்டும் அதே சத்தம். யாரது?’ என்று கேட்டான் அவன். கதவைத் திற. சீக்கிரம்!” இது யாராக இருக்கும் என்ற ஐயத்தோடு எழுந்து கதவைத் திறந்து பார்த்தால், நடராஜன் நின்று கொண் டிருந்தான். . எதிர்பாராத அவனுடைய திடீர் வருகை காந்திக்கு வியப்பு அளித்தது; அதிக மகிழ்ச்சியும் தந்தது. ஆனல், அவன் அமைதியாகக் காணப்படவில்லை. அவனுடைய போக்கில் ஒருவிதப் பரபரப்பும் மர்மமும் கலந்திருந்த தாக நண்பனுக்குத் தோன்றியது. காந்தி கதவைத் திறந்துவிட்டு அந்த இடத்திலேயே நின்று அவனை ஆச்சர்யத்தோடு பார்த்தான். அவன் அப்படி நிற்பதை நடராஜன் விரும்பாதது போல் அவன ஒதுக்கித் தள்ளி விட்டு, வேகமாக உள்ளே புகுந்தான்: கதவை அடைத்தான். :