பக்கம்:வீடும் வெளியும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 霍垒? உண்மை" நாட்டின் நிலைமை-மக்களின் போக்கு என் வாறு உள்ளது? கிராமங்களின் ஆத்மாவே மெலிந்து நலிந்து பாழ் பட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும்." இப்படி எண்ணினன் காந்திமதிநாதன். மில்களிலும், தொழிற்சாலைகளிலும் வேலை வாய்ப்பு கள் கிட்டக்கூடிய இடங்களில் வசித்தவர்கள் உழைக்கக் கூடிய உடல் வலிமை உடையவர்கள் இயந்திரங்களோடு இய்ந்திரங்களாக மாறிவிடுவதிலேயே பெரும் விருப்பு இதாண்டுள்ளனர். மாதம் தோறும் கைநிறையப் பணம் சம்பளமாகக் கிடைக்கும்; எட்டுமணி நேரம்தான் வேலை போனஸ் உண்டு லிவு ஜைத்திய வசதி போன்ற வேறு வேறு சில சலுகைகளும் கிடைக்கும். விவசாயத் தில், இதர கிராமத் தொழில்களில், இவை கிட்டுமர்? இவ்வாறுதான் பலருடைய மனமும் எண்ணமிட்டு, பிழைக்கும் வழியை வகுத்துக் கொடுத்தது. அடிக்கும் ஆர்வம் என்பது கிராம மக்களிடையே குறைவாகத்தான் உள்ளது. உழைக்கும் இனத்தில் வத் தவர்கள் தங்கள் பிள்ளைகள் தங்களைப்போல் கஷ்டப் படக்கூடாது என்றுதான் பிள்ளைகளைப் படிக்கவைத்து குமஸ்தா வேலைக்கோ எதற்கோ அனுப்புவதில் அக்கறை காட்டுகிறர்கள். அல்லது பம்பாய், கல்கத்தா போன்ற மாபெரும் நகரங்களுக்கு அனுப்பி விடுகிரு.ர்கள். அங்கே போய் தையல் வேலையோ, எதுவோ ஏற்று பிள்ளைகளும் மாதம் தோறும் பிறந்த ஊருக்குப் பணம் அனுப்பு கிருங்கள். , பணம்.இதுதான் வாழ்வின் ஜீவன்; வாழவைக்கும் அருமருந்து, மனித குலத்தை உய்விக்கும் அற்புத சக்தி. இதை எப்படியும் அடைந்தாக வேண்டும். அதற்கு நகரங் கள்தான் உதவும். இப்படி ஒரு எண்ணம் எல்லோரிட மும் ஏற்பட்டு, வளர்ந்து வருகிறது. ஆகவே நகரங்களை நோக்கி வருவோர் தொகை அதிகமாகி, நகரத்தின் ஜனத்தொகை பெருகுகிறது. நகரங்களின் வசதிக் குறைவுகளையும் பொருட்படுத்தாது,