பக்கம்:வீடும் வெளியும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟荡露 வீடும் வெளியும் கின்றன என்றுதான் எண்ண முடிந்தது அவனல். அவன் சுபாவம் அது. ‘இதெல்லாம் சாதாரண விஷயம். இதுக்கெல்லாம். மனசை அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்று அவன் அவ்வப்போது குறிப்பிடுவான். அவன் தந்தை செத்தில்தாயகம் செத்துப் போனதைக்கூட காந்தி அப் படிததான் ஒதுக்கி விட்டான். அவர் ஆளு நல்லாத்தான் இருந்தார். ஆயினும் உள்ளுக்குள்ளேயே சீக்கு இருந்து ஆளேத் தின்று வந் திருக்கிறது. கப்புனு ஒரு நாள் அடித்து விட்டது: இரண்டு நாள் படுக்கையில் கிடந்தார்; போய் விட்டார். காத்திக்குச் சொல்லி அனுப்பவுமில்லை. அவரே ஆள் அனுப்ப வேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறியிருந்தார். அவர் அப்படிச் சொல்லாமலே கண்ணை மூடிவிட்டால் கூட, அவருடைய இளைய மனைவியும் அவளைச் சேர்ந்தவர் களும் கர்ம சிரத்தையாக அவனுக்குத் தகவல் அனுப்பு வது பற்றி எண்ணியிருக்க மாட்டார்கள். அவன் எதுககு வந்து சொத்து கித்தென்று தகராறுக்குக் கிளம் பினுலும் கிளம்புவான். அவனுக் கிளம்பாவிட்டாலும், ஊரிலே இருக்கிறவங்க தூண்டி விடுவாங்க. அதெல்லாம் ஏன் வீண்வேலை?’ என்று சுலபமாக முடிவு கட்டியிருப் பார்கள். - சொத்துக்கு வாரிசு சிருஷ்டிப்பதற்கு என்று திட்டமிட்டுத்தான் செந்தில் நாயகம், தமது வயோதிகப் பிராயத்தில், ஒரு இளம் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டார். அவருடைய அந்த ஆசை நிறைவேற. வில்லை. அந்தப் பெண்ணும் அவளேச் சேர்ந்தவர்களும், அவருடைய சொத்து வேறு எங்கும் போய்விடக்கூடாது. என்று திட்டமிட்டு வாழ்ந்தார்கள். அவர் சாகப் போகிற காலத்தில் அவள், தற்காப்பு உணர்வோடு சகல சொத்துக்களையும் தன் பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டாள். தி -

அதெல்லாம் நிகழ்ந்து ஒரு சில வருஷங்கள் ஓடி விட் டன. சமூக வாழ்வில் இப்படி எல்லாம் நடக்கத்தான்