பக்கம்:வீடும் வெளியும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடும் வெளியும் 盈葛魯 செய்யும். இதில் எண்ணி மனம் குழம்புவதற்கு என்ன இருக்குது?’ என்று ஒதுக்கி விட்டான் காந்தி. அறிந்து போகப்போவது ஒன்றுமில்லை என்று நாம் சில விஷயங்களை ஒதுக்கிவிட விரும்பினுலும்கூட, அவை: தாம் இருப்பதை எப்படியாவது நமக்கு உணர்த்திவிடத் தவறுவதில்லை. இந்த வகையில்தான் காந்தியின் வீட்டு விவகாரமும் இருந்தது. அதனை அறிந்தவர்கள். அவ னுடைய தந்தை வீடு இருந்த தெருக்காரர், அல்லது விட்டாரத்தினர் யாராவது எப்பொழுதாவது அவ னைச் சந்தித்துவிட்டால், அவனுடைய சுக செளகரியங் களைப் பற்றி விசாரிப்பது வழக்கம். தொடர்ந்து, எப்படி இருந்த குடும்பம்! எவ்வளவு கெளரமாக விளங்கிய வீடு. அதன் மதிப்பு இப்படியா சீர் குலைய வேண்டும்?” என்து அனுதாப முன்னுரை கூறுவார்கள், பிறகு அந்தச் செய் தியை அறிவிப்பார்கள். நேரடியாகச் சொல்லி விடுவார்களா? உன் அப்பா வுக்குக் கடைசி காலத்திலே இப்படிப் புத்தி கெட்டுப் போக வேண்டாம். என்னவோ சொல்லுவார்களே? தன் முகத்துக்கு புத்தி கற்பிக்கவேண்டும் என்று தன்னுடைய மூக்கைத் தானே வெட்டிக் கொண்டாளும் ஒருவன்! அந்தப் புத்திசாலியின் காரியம் மாதிரித்தான் உங்க அப்பா செய்ததும் முடிந்திருக்குது. மகன் தன்னுடைய பெயரை, குடும்ப கெளரவத்தை எல்லாம் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டான், அவனுக்கு சரியானபடி பாடம் கற்பிக்கப் போகிறேன் என்று அவர் சொன்னர். உன் தாயார் இறந்த உடனேயே அவர் வேருெரு கல்யா ணம் செய்து கொண்டார். அதன் மூலம் அவருடைய அந்தஸ்து, பெயர் எல்லாம் உறுதியாக நிலைநாட்டப் படும் என்று கனவு கண்டார். ஆனல் என்ன நடந்தது? சொத்துக்கு ஆசைப்பட்டு, கிழவனே மணந்துகொண்டு பெரிய வீட்டுக்கு ராணியாக வந்தவள் சுகம் தேடுவதில் ஆர்வம் காட்டலானுள். செந்தில் நாயகம் உயிரோடு இருந்தபோது எப்படியோ, தெரியாது. யாரும் திச்சய மாகச் சொல்ல முடியாது. ஆனல் அவர் செத்த பிறகு, அம்மா ராச்சியம்தானே-சுயராச்சியம்! ஊரு பூராவும்