பக்கம்:வீடும் வெளியும்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

754 வீடும் வெளியும் சிரிப்பாய் சிரிக்குது. கடையிலே கணக்கு எழுதிக்கொண் டிருந்தாளும் ஒரு வாலிபப் பிள்ளையாண்டான். அவன் மேலே ராணியம்மாளின் கருணைக்கண் பதிந்து விட்டது. அவளுடைய ஆசை நாயகன் அவன் தான்! இந்த வித மாகச் சுற்றி வளைத்து, கதைபோல் பேசுவார்கள். காத்திக்கு இவ்விவகாரம் வேதனையே தந்தது. எப் படியும் போகட்டும்! அவள் இஷ்டம்போல் சுகமாக வாழட்டும். வாழ வேண்டும், என்று ஆசைப்பட்டுத் தானே அவளைக் கல்யாணம் செய்த பெரியபிள்ளை தன் சொத்து வீடு வாசல் எல்லாவற்றையும் அவளுக்கு அளித்து செளகரியம் பண்ணிக் கொடுத்திருக்கிருர்! அவள் அனுபவிக்கப் பிறந்தவள், வாழ வந்தவள்: அனு: பவித்து வாழ்கிருள்' என்று அறிவித்து. பேச்சைமுடித்து விடுவான். தனிமையில் அவன் உள்ளம் சோகத்தால் சாம்பும். -

  • பொது நலத்துக்காக, நாட்டின் சேவைக்காக, நான் உழைக்கக் கிளம்பியபோது எனது போக்கினல் அவருடைய மதிப்பும் மரியாதையும் குறைந்து விட்ட தாக ஆத்திரப்பட்டார் அவர். இப்போது என்மீது பழி தீர்த்துக்கொள்ள ஆசைப்பட்டு, ஒரு இளம் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள அவருடைய பண வெறி அவரைத் தூண்டியது. பணத்துக்கும் சொத்துக்கும் ஆசைப்பட்டு வந்த பெண், கணவன் பெயருக்குக் களங் கம் உண்டாக்கி விட்டாள். செந்தில்நாயகத்தின் குல கெளரவமும் சுயமரியாதையும் பாதுகாக்கப்பட்ட விதம் தான் என்னே என்னே!” என்று கசப்போடு சிரிக்கும் அவன் மனக்குறளி. .

இதுபோன்ற சமயங்களில் அவனுக்கு ஒரு பெண் னைப் பயன்படுத்தி, வாழ்க்கை வசதிகளைத் தேடிக்கொள் வதில் முனைந்திருந்த டிரைவர் சோமுவின் நினைவும் வரும். பணமும் செளகரியமான வாழ்க்கையும் இல்லாத வர்களும் இந்த வழியைக் கையாள்கிருர்கள்; அவர்க ளுடைய பசி ஒரு ரகமானது. வாழ்க்கை வசதிகளும் பணமும் மிகுதியாகப் பெற்றவர்கள் கூட இப்படி ஒரு போக்கை மேற்கொள்வதும் சமூகத்தில் சகஜமாகத்