பக்கம்:வீடும் வெளியும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 蕊 தான் இருக்கிறது. இவர்களுடைய பசி வேறு ரகமானது! பசிகள் பலவிதம்; அவை மனிதரை எவ்வாறெல்லாமோ ஆட்டி வைக்கிறது.-இதுவும் காந்தியின் சிந்தனைதான். காந்திமதிநாதன் அன் ைத்தை எதிர்பாராத வித மாகச் சந்திப்பதற்கு காலம் துணை புரிந்தது. ஒரு நாள் சுந்தரத்தை வழி அனுப்புவதற்காக அவன் ரயில் நிலையம் சென்ருன். அவர் பிரயாணமான பிறகு, அவன் அவசரம் இல்லாமல் அங்குமிங்கும் மெது நடை போட்டு, பார்வைக்கு விருந்தளித்துக் கொண் டிருந்தபோது, பிளாட்பாரத்தில் பெட்டியோடும் இரண்டு குழந்தைகளுடனும் காத்திருந்த ஒரு பெண் அவன் கவனத்தைக் கவர்ந்தாள். அவனேயே அவள் கூர்ந்து நோக்குவதையும், அவனே ப் பார்த்துச் சிரிப்பது போல் காட்சி தந்ததையும் அவன் கவனித்தான் யார் இது? எங்கோ பார்த்த முகம்போல் தோனுதே' என்று அவன் மனம் குறு குறுத்தது. அவனே நோக்கி அவள் சிரித்துக் கொண்டே வந்தாள் அத்தான்! என்ன, செளக்கியமா?’ என்று கேட்டவுடன்தான் , அ ட | ட |ா, அன்னமல்லவா! என்னமாக மாறிப் போளுள்!’ என்று அவன் உணர்வு விழிப்புற்றது. முகம் மலர, 'அன்னம், எங்கே போகிறே? உன்னைப் பார்த்து ரொம்ப வருஷமாச்சுதே' என்ருன். "நீங்கதான் என்னை அடியோடு மறந்து விட்டீர்கள். அன்னம் இருக்கிருளோ செத்தாளோ என்ற கவலேகூட உங்களுக்கு ஏற்பட்டிருக்காது!’ என்று மனக்குறையோடு பேசினுள் அன்னம். "நீ செளக்கியமாக, குழந்தைகளோடும் மாப்பிள்ை யோடும் இருக்கிருய் என்று எனக்குத் தெரியும். நேரிலே பார்ப்பதில்லையே தவிர, உன்னைப்பற்றி விசாரிக்காமலா இருப்பேன்’ என்று, அவள் சிறிது திருப்தி கொள் 'ளட்டுமே எனும் எண்ணத்துடன், காந்தி கூறிஞன். "ஊம் இவ்வளவாவது சொன்னீர்களே!” என்து வறட்டுச் சிரிப்புடன் தெரிவித்தாள் அன்னம். 'அத்தை