பக்கம்:வீடும் வெளியும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடும் வெளியும் 翼魔 “காந்தி! என்ன விளையாட்டு இது வீட்டுக்கும் போ!' என்ருர் தந்தை. குழைவாக, இயல்பான குரலில் பேசுவதாகத்தான் அவர் நினைத்தார். ஆ ஞ ல் அவருடைய உள்ளக் கடுகடுப்பு அனலெனக் கனன்றது, அவர் வாயிலிருந்து உதிர்ந்த சூடான சொற்களில். "பைத்தியக்காரத் தனத்துக்கும் ஒரு எல்லை. இருக்கணும், காந்தி: ஊரில் உள்ள பைத்தியக்காரங்க கூட நீ ஏன் சேரனும்?' என்ருர் ஆவர். காந்திமதிநாதன் கரம் கூப்பினன். நம் நாட்டைச் அரண்டிக் கொழுக்கும் அந்நிய வர்த்தகத்தை எதிர்ப் போம். நம்நாட்டு ஏழை மக்களின் வயிற்றிலடிக்கும் அயல்நாட்டு வாணிபத்தைப் பகிஷ்கரிப்போம். அந் தியச் சரக்குகளைத் தீயிட்டு எரிப்போம்!” என்று பணிவாக, ஆயினும் உறுதி கலந்த குரலில் சொன்னன். காந்திக்கு ஜே காந்திக்கு ஜே!"என்ற ஒலிபெருகிப் அரவியது, உடனே. திருநகரின் மக்கள் அந்நேரத்தில் எந்த காந்திக்கு ஜே போட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாது விழித்தார்கள் கடைக்காரர்கள் உணர்வற்றுக் கிடந்து, அடிமைத்தனத்தையும் தவிர்க்க முடியாத பல்பாக-வாழ்க்கை நியதி என்றே-மதித்து, உண்டு உறங்கி ஏதேதோ செய்து நாளோட்டிய நாட்டு மக்களை விழிப்புற்று விடுதலை தாகம் பெறச் செய்து, செயல் வீரர்களாக மாற்றிய அண்ணல் காந்திக்கு அவர்கள் ஜே சொல்லியிருக்கலாம். தந்தையையே எதிர்த்து, சுயநலம் உதிர்த்து அவரிடமே நல்லுரை கூறத் துணிந்த முதலாளி மகன் காந்திக்கும் அவர்கள் ஜே போட்டிருக்கக் கூடும். மக்களின் உணர்ச்சி உற்சாகம் எப்படி எப்படியோ வெளிப்பட்டுக் கொண்டிருந்த வேளை அது. அந்த இடத்திலேயே மகனைப் பிடித்து, 'நாடகமாலேய் ஆடுறே? என்று கன்னத்தில் இரண்டு அறை கொடுத்து, அவனுக்கு புத்தி புகட்டவேண்டும் என்றுதான் முதலாளி ஐயாவுக்கு சூடு பிறந்து. ஆனல் சூழ்நிலையை பும் சந்தர்ப்பத்தையும் நினைவில் நிறுத்தி அவர்