பக்கம்:வீடும் வெளியும்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

డిక్ష வீடும் வெளியும் டான். உணர்ச்சி வேகத்தோடு, எதிர்ப்புக் கோஷங்களை ஓங்கிக் கூவிஞன். அவ்வேளைச்கு அவனுக்கு இவை எல்லாம் ஊக்கமும் உவகையும் தந்தன. எனினும் இவை மட்டும் போதா, இன்னும் உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும்' என்று துரண்டியது அவன் அறிவு. பலப்பல வருஷங்களுக்கு முன்பு பாரதமாதாவின் சேவைக்காகத் தன்னைத்தானே தொண்டனுக அர்ப். பணித்துக்கொள்ளத் துணிந்த சந்திர்ப்பம் அவன் உள் கிளத்தில் மின்னலிட்டது. தன்னை அவ்வாறு செயலுக்குத் து.ாண்டிய நண்பன் நடராஜனின் நினைவு வந்தது. "அவன் எங்கிருந்தாலும் இப்பொழுதும் சும்மா இருக்க மாட்டான்' என்றது காந்தியின் மனம். அவன் என்ன செய்யத் துணிவான் என்ருெரு கேள்வியும், அதற்கு ஒரு பதிலும் அவன் உள்ளத்தில் ஒலி செய்தன. "ஆமாம். அதுதான் சரி. நானும் அவ்விதமே செய்வேன்' என்று தீர்மானித்தான் காந்தி. நாட்டின் பாதுகாப்புக்குப் போராடுவதற்கு தங்கள் உழைப்பை, உடலே. உயிரையே உவந்து தர முன்வந்த பலப்பல. பாரத புத்திரர்களேப் போல அவனும் ராணுவத்தில் சேர்ந்து போரிடச் சென்ருன். "சுதந்திரம் நமது பிறப்புரிழை” என்று கோஷித் தார்கள்-அந்தக் காலத்தில். அதில் அவன் குரலும் கலந்திருந்தது. "சுதந்திரம், அதைக் காப்பது நம் கடமை' என்ற வீரர்_குரல் ஒலிக்கத் தொடங்கியிருந்தது இப்போது. காந்திமதிநாதன் ஆத்ம பூர்வமாகத் தன் இதய ஒலி யைக் கலந்தான் இதிலே,