பக்கம்:வீடும் வெளியும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. தந்தையின் உதவி மேடை முதலாளி பிறவிப் பெருமாள் எதையும் பிரமாதமாகச் செய்யவேண்டும் என்று ஆசைப் அடுகிறவர். தான் சம்பந்தப்படுகிற காரியம் எதுவுமே சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களின் கவனத்தைக் கவரும்படியாக இருக்கவேண்டும்; அத்துடன் அமையாது பலரும் ரொம்ப காலத்துக்கு எண்ணிப் பார்த்துப் பேசக் கூடியதாகவும் இருக்கவேண்டும். இது அவருடைய உள்ளக் கிடக்கை. தமது ஆசையும் நோக்கமும் நிறைவேறுவதற்காக அவர் பணத்தைப் பணம் என்று பாராமல் வாரி இறைப்பார். எதையும் எளிய முறையில் செய்யத் தெரியாது அவருக்கு. சாதாரண விஷயத்திலேகூட திடபுடல் புகுத்தப்படவேண்டும்; அப்பொழுதுதான் அவருக்குத் திருப்தி. திருநகர் பெரிய கடைவீதியின் ஜவுளிக் கடைகள் முன்னே மறியல் நடைபெற ஆரம்பித்ததை அவர் கவனித்து, அவ்வப்போது தமது அபிப்பிராயங்கரை வெளியிட்டும் வந்தார். நகரின் பிரபலஸ்தர்களும், பெரிய மனிதர் வீட்டு அம்மையார்களும் மறியலில் வெறுமனே ஈடுபட்டு விட்டதை அவரால் ரசிக்க முடிய வில்லை. சேl iணுகக் கெடுத்து விட்டார்கள், மிக அரு மையான சந்தர்ப்பம் இல்லையா இது? பாண்டு வாத் தியம், அதிர்வெடி முழக்கு முதலிய தடபுடல்களோடு, இவர்கள் ஊர்வலம் வந்து, மறியல் செய்திருக்கவேண்டும். அப்போது எவ்வளவு பப்ளிசிட்டி' கிடைத்திருக்கும்: அவர்களுக்கு மட்டும்தான பப்ளிசிட்டி? காந்தியின் போராட்டத்துக்கும் அவர் கட்சிக்கும் அருமையான விளம்பரமாக இது அமையுமே!’ என்று அவர் சொன்னர், “காந்திஜி எளிமையைத்தான் விரும்புகிரு.ர். காந்தியின் கட்சி தரித்திர நாராயணர்களின் உரிமைக் காகப் போராடுவது. அதில் இந்த விதமான தட