பக்கம்:வீடும் வெளியும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வீடும் வெளியும் புடல்களுக்கே இடமில்லை’ என்று ஒரு அன்பர் சொன்ஞர். இருக்கட்டுமே! மக்களின் மதிப்பையும், பேராதர வையும் பெறுவதற்கு உயர்ந்த கொள்கைகளுக்குக்கூட ஒரு ஷோ வேண்டியதுதான். கடவுளே மக்களின் மதிப் பையும் பக்தியையும் கும்பிடுதல்களையும் பெறுவதற்காக திருவிழ என்றும், தேரோட்டம் என்றும் தடபுடல் படுத்தி நாளுக்கு ஒருவிதமாக அலங்காரம் செய்து கொண்டு, வீதிகளில் வருகி டிரே! அப்புறம் என்ன?” ஒன்று வாதாடிஞர் முதலாளி. ச.சாமி அவராகவா வாருரு? இதெல்லாம் வேணும் என்று அவரா சொல்ருரு?’ என ஒரு நண்பர் கேட்டார். "நாமாகச் செய்கிறதுதான் எல்லாம்!” என்று இன்ளுெருவர் குறுக்கிட்டார். "அது மாதிரி எல்லாம் ஏன் செய்கிருேம்? மக்கள் மனசில் சுலபமாக இடம் பிடிக்கணும் என்பதற்காகத் தானே? சாதாரண ஜனங்களைக் கவர்ச்சிப்பதற்கு இதெல் ஆாம் தேவைதான்’ என்று அவர் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார், தரித்திர நாராயணர் களேப் பிரதிபலிக்க வேண்டுமா? சரி. பாண்டும் நாத ஈரக் கச்சேரியும் வேண்டாம். கரகம், காவடி, சிலம்பம் இதுகளுக்கு ஏற்பாடு பண்ணு!’ என்றும் தெரிவித்தார். அவருடன் வாதாடுவது வீண் விவகாரமாக முடியும் என்று அறிந்து வைத்திருந்த அவருடைய நண்பர்கள் பேச்சை வளர்க்கவில்லை. அப்படியே விட்டுவிட்டார்கள். ஆஞல், பிறவிப் பெருமாள் தமது ஐடியா'வை "ஐயோன் னு போகும்படி விட்டுவிடத் தயாராக இல்லை. புதுமையாக ஏதேனும் செய்து தனது பெருமையை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணம் பலமாக அவரைப் பிடித்து ஆட்டலாயிற்று. அவர் ஒரு முடிவையும் கண்டு விட்டார். ஆகா, பேஷான திட்டம். பிரமாதமாக இருக்கும்' என்று அவர் தன் முதுகில் தானே திட்டிக் கொடுத்துக் கொள்ளத் தவறவுமில்லை.