பக்கம்:வீடும் வெளியும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடும் வெளியும் 多蕊 எந்த ஒரு இயக்கத்தின் வளர்ச்சியையும் இதற்கு ஒப்பிடலாம். சிந்தனையில் உருவாகி, செயல் வடிவம் பெறுகிற ஒரு சக்தி முதலில் சிலரைக் கவர்கிறது. பிறகு, பலரால் வரவேற்கப்படுகிறது. செயல் வேகமும் ஆகர் விப்புத் திறனும் அதிகம் ஆக ஆக, மக்கள் மத்தியில் உணர்ச்சி வேகத்தோடு பரவுகிறது. எங்கும் புதியதோர் உத்வேகத்தோடு உற்சாகமும் ஊக்கமும் படர்ந்து பாய் கின்றன. காந்திஜியின் வழிகளுக்கும், திட்டங்களுக்கும் நாட்டில் இந்த விதமான வரவேற்பு இருந்தது. நாளுக்கு நாள் அவரது சக்தியின் வலிமை அதிகரித்துக் கொண்டி ருந்தது. காந்திஜீயின் ஆன்ம பலத்தால் கவரப்பட்டவர் களில் செல்வர்களும் சீமான்களும் சிறப்பாக வாழ்ந்தவர் களும் சுக போகிகளும் இருந்தார்கள்: படித்தவ்ர்களும் பட்டம் பெற்றவர்களும் பதவிகளில் இருந்தவர்களும் ஒளி மயமான எதிர் காலத்தைப் பெறும் தகுதி பெற்ற வர்களும் இருந்தார்கள். அதே போல, ஏழை எளியவர் களும் அன்ருட வாழ்க்கைக்கு அல்லாடியவர்களும் வாழ்க்கை வெயிலால் வதக்கி வாட்டப் பெற்றவர்களும் இருந்தார்கள். இந்த விதமான ரகத்தினர் பலரையும் திருநகரிலும் காண முடிந்தது. தொண்டர் நாதன் என்று எல்லோ ராலும் அழைக்கப் பெற்ற சாதாரண நபரும் அவர்களுள் ஒருவர். சர்வ சாதாரணத் தோற்றம். சரியான போஷிப்பு இல்லாததனுல் உலர்ந்து மெலிந்த வடிவம். கூடு எடுத்த மார்பை மூடி மறைப்பதற்காக ஒரு சட்டை. இடுப்பில் அரைக்கால் சட்டை, காக்கித் துணியில், எண்ணெய் காணுத செம்பட்டைத் தலை, செருப்போடு உறவாடாத, சதா புழுதி ஏறி அழுக்காய் தோன்றும் கால்கள். ஆளுல், உழைப்பின் வடிவம், சுறுசுறுப்பின் சின்னம். பணிவின், அடக்கத்தின், செயல் துடிதுடிப்பின் உயிர் உருவம். அவர் தான் தொண்டர் நாதன்.