பக்கம்:வீடும் வெளியும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

rே வீடும் வெளியும் அவர் பெயர் விசுவநாதனே என்னவோ, அது சரியாகத் தெரியாது யாருக்கும். ஆனால், தொண்டர் நாதன் என்ருல் சிறு பிள்ளைகூட நன்கு அறியும். எங்கும் இருப்பார். எல்லாக் காரியங்களையும் முகம் கோளுது கவனிப்பார். கூட்டம் என்ருல் மேடை அமைப்பது, கொடி கட்டுவது, தண்டோராப் போட்டுச் செய்தி அறிவிப்பது முதலிய சிறு சிறு-எனினும், கூட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு இன்றியமையாத. தாரிய்ங்களை எல்லாம் கவனித்துச் சீராகச் செய்வதில் முன்னிற்பவர் அவர்தான். ஊர்வலம் முதலிய சகல ஏற்பாடுகளிலும் அத்தியாவசியமான அலுவல்களைக் கவனிப்பவர் அவரே. கூட்டம் நிகழ்கிற சமயத்திலும், ஊர்வலம் நடை பெறுகிற போதும், மக்களின் உற்சாகத்தைத் தூண்டு வதற்காகவும், ஈடுபடுகிறவர்களுக்கு ஊக்கம் தருவதற் ஆாகவும், தகரக் குழாயை வாயருகே வைத்துக் கொண்டு, அபோலோ பாரத் மாதா கி” போலோ மகாத்மா தாந்திக் கி- என்று கூவி, ஜே போடும்படி அடிக்கடி ஆர்வ மூட்டுகிறவரும் அவர்தான். ச:சொல்லுங்கள்-பாரத மாதாவுக்கு...' சொல்லுக, மகாத்மா காந்திக்கு.’’ என்று அழகுத் தமிழில் உவகை ஒலி எழுப்புவதை விட, வட நாட்டினர் பாணியில் ேேபாலோ பண்ணுவதே கெளரவம் என்ற எண்ணம் அந் நாளேயத் தொண்டர்களிடம் வேரூன்றி இருந்தது. அந்த பாஷனை'ப் பின் பற்றி தொண்டர் நாதனும் பெருமையாக ஒலி எழுப்புவது வழக்கம். அந்நியர் ஆட்சிக்கு அடிமைப்பட்டுக் கிடந்த பெரிய நாட்டின் மக்கள், வாராது வந்த மாமணியாய் வாய்த்த அரிய தலைவரின் சக்தியினல் தூண்டப் பெற்று, ஆள் வோருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தபோது தங்கள் எதிர்ப்பையும் வெறுப்பையும் சிறு சிறு செயல்களின் மூலமும் வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி கண்டார்கள். அரசுக்கு சிறு நஷ்டம் ஏற்படுத்திலுைம், தங்கள் எதிர்ப் பைக் காட்டும் செயல் நிறைவும் என்று பலர் எண்ணிஞர்