பக்கம்:வீடும் வெளியும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

á?“ அன்னம் தன் அத்தான்மீது விருப்பம் கொண்டி ருந்தாள். அக்கம் பக்கத்தினரும் உறவினரும் கேலிப் பேச்சுகளாலும் நேர்மொழிகளினுலும், சின்ன வயது முதலே, அவள் உள்ளத்தில் ஆசை வித்திட்டு வளர வைத்திருந்தார்கள். அவளுக்கு என்ன ராஜா மாதிரி அத்தான் இருக்கான்’ என்றும், அத்தானுக்காக காத் திருக்கிருள் அன்னம் என்று பலவாருகப் பேசி அவளுக்கு இன்பமயமான எதிர்காலம் பற்றிய கனவுச் சித்திரங் களுக்கு வகைசெய்து கொடுத்திருந்தார்கள். அவளும் அவ்விதமே நம்பினள். அத்தானின் படிப்பு முடிந்ததும், அத்தானுக்கும் எனக்கும் கல்யாணம் நிகழும்” என்து. அவள் ஆசைப்பட்டாள். - காந்தி, மற்றவர்கள் எதிர்பார்க்க முடியாத விதத் திலே செயல்புரிய ஆரம்பித்த பிறகு உறவுக்காரர்கள் அவனைக் கரித்துக் கொட்டினர்கள். அன்னத்தின் அப்பாவும் அம்மாவும் கூட அவனைப் பழித்தார்கள். அந்தப் பேச்சுகள் அந்த யுவதியின் உள்ளத்தில் சுடுசர மாய் பாய்ந்தன. "நம்ம அத்தான் ஏன் இப்படி மாறனும்?' என்று குழம்பினுள் அவள், காந்தியை ஒரு தடவை நேரில் கண்டு பேசவேண்டும் என்று விரும்பினள். தன் கெஞ் சினுல், அழுது வேண்டினுல், அத்தானின் மனம் மாறி ஞலும் மாறிவிடும் என்று ஒரு அசட்டு ஆசையை வளர்த் தாள் அந்தப் பேதை, 10. பணத்தின் சக்தி முதலாளி பிறவிப் பெருமாள் அவர்களின் செல்வ: மகன் திருமலை, க்ட்சியில் சேர்ந்தது பெரிய திருவிழா படும்பாடு பட்டது. அதே சந்தர்ப்பத்தில் மேடை முதலாளி தமது சுதேசி பந்தாரையும் தடபுடலான ஆரம்ப விழாவுடன் திறந்து வைத்தார்.