பக்கம்:வீடும் வெளியும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 器遂 இவன் கேவலமாகப் பேசித் திரிவான். போருன் வெறும் யேல்: என்று அவர் மனம் பேசியது. இரண்டு தினங்களுக்குப் பிறகு ஒரு நிகழ்ச்சி நடத் தது. மேடை முதலாளிக்கு நஷ்டம் ஏற்படுத்தும் சம்பவம். அவரது பழைய ஜவுளிக் கடையின் பட்டு தினுசுகள் விதேசித் துணி ரகங்கள் எல்லாம் தனியாக ஒரு இடத்தில் பத்திரப்படுத்தப் பெற்றிருந்தன. அந்த இடம் தீப்பற்றி எரிந்து, சரக்குகள் முழுமையும் சாம்ப லாகி விட்டன. தீ எப்படிப் பிடித்திருக்கும் என்று தெரியவில்லை. -

  • முதலாளி தானுக அவற்றை எல்லாம் தீயில் போட வில்லை அல்லவா? அதனுல் தீயே வந்து அவற்றை விழுங்கி விட்டது' என்று கவிராயர் தொண்டர் நாதனிடம் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

அவரும் தொண்டர் நாதனும் வேறு சிலரும் முத லாளியின் விதேசித் துணிகளுக்குத் தீ வைத்திருக்கலாம் என்று மேடை முதலாளி சந்தேகப்பட்டு ரிப்போர்ட் கொடுத்திருப்பதாக, போலீசார் அவர்களைக் கைது செய்து சென்றனர். - இச் செய்தி திருநகர் எங்கும் பரபரப்பு உண்டாக்கி விட்டது. 11. அன்பின் அழைப்பு காந்திமதிநாதனின் மாமா மகள் அன்னம், சராசரிப் பேண். அவளுடைய கனவுகள், ஆசைகள், வாழ்வின் குறிக்கோள் எல்லாம் கல்யாணமாகிக் குடும்பம் நடத்த வேண்டும், குழந்தைகளுக்குத் தாயாக வேண்டும், சீரும் சிறப்புமாக - பணத்தோடும் பவிஷோடும் - காலம் கழிக்க வேண்டும் என்ற வளையத்திற்குள்ளேயே அடங் கிக் கிடந்தது.