பக்கம்:வீடும் வெளியும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் . リ ஆயினும் அன்னம் ஏமாற்றத்தை நிச்சயமான முடி வாக அங்கீகரிக்கத் தயாராக இல்லை; தன் அத்தானைக் கண்டு பேச வேண்டும் என்று துடித்தாள். அவனைச் சந்திப்பது என்பதே அவளேப் பொறுத்த மட்டில் மிகவும் சிரம சாத்தியமான செயலாகத் தோன் நியது. அவன் அவனுடைய வீட்டில் தங்கியிருந்தால், அல்ல்து வீடு இருந்த தெருவோடு போய் வந்து கொண்டிருந்தால், அவள் அவனைக் கண்டு பேசுவதற்கு வாய்ப்புகள் கிட்டும். அவனே அந்தப் பக்கமே த்ன் காட்டுவதில்லை. அவள் என்ன செய்ய முடியும்: இவன் தனியாக தென்படுவதுமில்லை; தொண்டர்களோடு கற்றித் திரிகிருன்; பொதுக்கூட்டம் ஊர்வலம் இவை கiல்தான் அவனைப் பார்க்க முடியும் என்பதை அவள் அறிந்து கொண்டாள். அங்கெல்லாம் அவள் போக முடியாதே? ஆகவே அன்னம் சோகத்தின் சித்திரமாகக் காலங் கழித்தாள். ஒரு_நாள் அவளுக்கு உற்சாகம் தரக்கூடிய செய்தி ஒன்று கிடைத்தது. அவர்கள் வட்டாரத்தில் இருந்த ஒரு கோவில் ஹரிஜனங்களுக்காகத் திறந்து விடப்ப்டும் என்றும்,அது சம்பந்தமான முன்னேற்பாடுகளை கவனிக்கக் காந்திமதிநாதன் அங்கே வருவான் என்றும் அவள் அறிய நேர்ந்திது. அன்று அவனே எப்படியும் சந்தித்து விடுவது என்று உறுதி பூண்டாள் அன்னம். தின் எண்ணத்தை (அவள் தன் எண்ணத்தை) அவள் தின் அத்தை பர்வதத்தம்மா வளிடம் தெரிவித்தாள். பர்வதம் நெடுமூச்சுயிர்த்தாள். * உன் மனசைப் புரிந்து கொள்ளும் சக்தியைக்கூட இழந்து விட்டானே என்னமோ அந்த ஈஸ்வரிதான் அவன் மனசில் வெளிச்சம் புகுத்தணும்' என்று சொன் ஞள். நீ அவனைப் பார்த்துப் பேச முடிந்தால் எனக் காக இதையும் சொல்லு, அவன் நினைப்பே என் நெஞ்சை அரிச்சுத் தின்னுது. அதே கவலேதான் எனக்கு. அவன் கதி என்ன ஆகுமோன்னு எண்ணி, ஏங்கி, நானே படுக்கையில் விழுந்து விட்டேன். இதே வி. வெ. 4-485