பக்கம்:வீடும் வெளியும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 每擎 தேசபக்தி கொண்ட பெரியவர்களையும் வசீகரிக்க முடி கிறது. அதனுல் சாதாரணத் தொண்டர்களே தங்களுக்கு வேலை செய்து பணிந்து நடக்க வேண்டியவர்களாக அவர்கள் கருதுகிருர்கள். பிறகு அலட்சியப்படுத்து கிருர்கள். இந்தவிதமான ஒரு எண்ணம் தொண்டன் நாதனின் உள்ளத்தில் தலையெடுத்தது. அதே சமயத்தில் அவர் மனசின் ஒரு பகுதி அவரைக் கண்டிக்கவும் செய்தது. காந்தி வழியை தனது வாழ்க்கைத்தர்மமாகவிரித்துக்கொண்டுள்ள ஒரு தொண் டன் இப்படிப் பழி சுமத்துவதுகூடத் தவறேயாகும் என்று அவர் உள்ளம் அறிவுறுத்தியது. மகாத்மாகாத்தி, பிறர் செய்த தவறுகளுக்குக்கூடத் தாமே பொறுப்பு ஏத் றும், பிறரது செயல்களால் ஏற்படும் பழியைத் தம் மீது போட்டுக் கொண்டும், பிராயச்சித்தமாகத் தமது ஆத்ம சக்தியைத் தூய்மைப்படுத்துவதாக அறிவித்து கடுமை யான உண்ணுவிரதத்தை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரைப் பின்பற்றுகின்ற தொண் டன் அவ்வளவு துரத்துக்குத் தீவிரம் காட்ட இயலாது போனலும் சமூக உயர் அந்தஸ்தில் இருக்கிறவர்களின் போக்குகளைச் சகித்துக் கொள்ளக் கற்க வேண்டும் என்று நாதன் நினைத்தார். தீர்மானம் செய்வது எளிதாக இருந்தது. அதை நடைமுறையில் கையாள முயலுகிறபோது சிரமமாகத் தான் தோன்றியது, அதிலும், மேடை முதலாளியின் உண்மைத் தன்மையை அறிய நாதனுக்கும் அவரைப் போன்ற தொண்டர்களுக்கும் அவர்மீது வெறுப்பும் கசப்புமே வளர இடமேற்பட்டது. பிறவிப் பெருமாளின் அந்நிய நாட்டு ஜவுளிகள், பட்டுத் துணிகள் முதலியவற்றுக்கு அயலார் யாரும் தீயிடவில்லை ; அவரே தான் கொளுத்தி விட்டார் என்று சிலர் பேச்சு பரவ விட்டார்கள். அதற்குக் காரணம் அவருக்குப் பைத்தியம் எதுவும் பிடித்து விடவில்லை : சுலபமாகப் பணம் பெற வழியிருந்தது என்பதுதான் என்றும் அவர்கள் சொன்னர்கள். முதலாளி அவற்றை எல்லாம் பெரிய கம்பெனி ஒன்றில் இன்ஷ்யூர் செய்திருந்