பக்கம்:வீடும் வெளியும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感盈 வீடும் வெளியும் தார்: தீ விபத்தில்ை சரக்குகள் சேதமாகி நஷ்டம் ஏற். பட்டதனுல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி அவருக்குப் பெரும் தொகை அளிக்கும் என்று அவர்கள் விளக்கினர்கள், சுய தலத்தோடுதான் முதலாளி காரியம் செய்திருக்கிருர் : விபத்து எனக் காட்டுவதற்காகவே அவர் தவிராயரையும் நாதனையும் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டார் என்ற ஊகம் பிறக்கவும் தொண்டருக்கு அவர்மீது ஆத்திரமே உண்டாயிற்று. - எனினும் அவருடைய கோபமும் கொதிப்பும் மேடை முதலாளியை என்ன செய்திட முடியும் ? உம், இப்படிப்பட்டவங்க ஒரு இயக்கத்தில் வலிய வந்து சேரு வதை யாரும் தடுத்துவிட முடியாதுதான். இவர்களால் இயக்கத்துக்கு பலழும் பலனும் உண்டு என்று தோன்றி குலும், தாள்டைவில் இயக்கத்தின் பலமே கெட்டுப் போகும். இவர்கள் புல்லுருவிகள் போல்தான் என்று. தொண்டர் எண்ணிஞர். மேடை முதலாளியின் மகன் திருமலையும், அப்ப துக்குப் பிள்ளே தப்பாமல் இருக்கிருன்’ என்ற கணக் கில்தான் விளங்கினன். அவனுக்கு நாட்டுப்பற்ருே, விடுதலை வேகமோ, காந்திய லட்சியமோ பிரமாதமாக ஏற்பட்டு விடவில்லை. கட்சியில் சேருவதும் ஊர்வலங் களில் கலந்து கொள்வதும், பெரிய தலைவர்கள் மாதிரி ஆடைகள் அணிந்து திரிவதும் நல்ல பொழுதுபோக் காகவும் ஆனந்தம் தரும் பாஷன் ஆகவும் அமைந்து விட்டன. அவனுக்கு. பெரிய வீட்டுப் பிள்ளைகள் சிலர் அவனைப் போலவே நடந்து கொண்டார்கள். அதெல் லாம் காலம் செய்த கோலம்’ என்றே தொண்டர் நாதன் கருதினர். திருநகரில் இவ்வாறு போலி தேசபக்தர்கள் இருந்து, வெளிச்சமிட்டு வருவதை நாதனும், காந்தியும், அவர் களைப் போன்ருேரும் வெறுத்தார்கள். என்ருலும் நாட் டின் விடுதலை என்பது மாபெரும் விஷயமாகும் என அவர்கள் உணரத் தவறவில்லை. தங்களைப் பொறுத்த வரையில், தாங்கள் உண்மையாய், ஆத்ம பூர்வமாய் விடு தலை இயக்கத்துக்குப் பாடுபட வேண்டியதே தங்கள்