பக்கம்:வீடும் வெளியும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 盗 வீரும் வெளியும் 1. மக்கள் இட்ட தீ! திருநகர் என்னும் அழகான பெயரையும் வனப்பு நிறைந்த தோற்றத்தையும் பெற்றிருந்த அந்த ஊர் இரண்டு மூன்று நாட்களாகப் பரபரப்புக்கு உள்ளாகி யிருந்தது. உருக்கம் நிறைந்த காட்சிகளும் வெறி மிகுந்த கூத்துக்களும் நிகழும் அரங்கமாக மாறியிருந்தது. அவ்வூரின் பெரிய கடை வீதி. அக் கடைத் தெருவில் பெரிய பெரிய ஜவுளிக் கடைகள் இருந்தன. தினந்தோறும் பெருத்த அளவுக்கு வியாபாரம் நிகழக்கூடிய இடங்கள் எல்லாம் இப்போது உணர்ச்சிகரமான செயல்களுக்கும் சோகமய நாடகங் களுக்கும் வ்கைசெய்யும் களங்களாக விளங்கின. வெண்ணிற உ ைட த ரி த் த தொண்டர்களும், ஆரஞ்சு வர்ண ஆடை புனைந்த பெண்களும் ஒவ்வொரு கடைக்கும் முன்னல் அமைதியாக நின்ருர்கள். துணி வாங்க வருவோரை வழிமறித்து, வணக்கம் அறிவித்து, "அந்நிய நாட்டுத் துணிகளை வாங்காதீர்கள். சுதேசித் துணிகளே வாங்குங்கள், கதரே கட்டுங்கள்!"என்று வேண்டு தல் தெரிவித்தார்கள். வழியோடு சென்றவர்களிடம் துண்டுப் பிரசுரமும் அளித்தார்கள். அமைதி நிறைந்த சாதாரணச் செயலாகத் தோன்றிய இந் நிகழ்ச்சி நாடெங்கும் அடக்கு முறை யையும், தடியடி தாண்டவத்தையும் தூண்டிவிட்டிருந் வீ. வெ. 1-445 -