பக்கம்:வீடும் வெளியும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 酚置 சில கிழடு கட்டைகள் முணமுணத்தாலும் பொதுவாக உற்சாகமான ஆதரவும் வரவேற்பும் காட்டப்படுவதை காந்திமதிநாதன் உணர்ந்திருந்தான். மனிதர்கள் தங்களோடு சேர்ந்தவர்களையே தாழ்த்தி வைப்பதும், ஒதுக்கி விலக்குவதும் நியாயமல்ல; மனிதத் தன்மையும் அல்ல என்று அவன் வெகு காலமாகவே கருதி வந்தான். பிறப்பின் காரணமாகச் சிலர் உயர்வு கொண்டாடிப் பெருமை பேசுவதும், தொழில் காரண மாய் சிலரை இழிவாக மதிப்பதும் அவனுக்கு உகந்த தாய் பட்டதில்லை. எத்தொழிலும் கெளரவமானதே என்று அவன் எண்ணினான். லேண்ட் லார்டு’ எனச் சொல்லிக் கொண்டும், சுக ஜீவனம் என்று திருப்தி யோடு குறிப்பிட்டும் எவ்விதமான வேலையும் செய்யா மலே, சோம்பேறி வாழ்க்கை வாழ்கிற அவனுடைய சொந்தக்காரர்களே எண்ணும்போதே அவனுக்கு ஆத்திரம் எழுவது வழக்கம். அவர்களைவிட, உழைத்துப் பாடுபடுகிறவர்கள் உயந்தவர்கள் என்று அவன் நம்பினன். ஆலயம் எல்லோருக்கும் பொது என்று ஏற்பட் டிருப்பினும், அநேகர் இறைவனை வழிபட உள்ளே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டிருந்தது, மதத்திலுள்ள பெரிய குறைபாடாகவே தோன்றியது அவனுக்கு. உள்ளே வரக்கூடாது என ஒதுக்கிவைக்கப் பெற்றவர்கள், வெளியே கொடிமரத்துக்கு அப்பால் நின்று தேங்காய் உடைத்து வணங்கலாம் என அனுமதித்து அதற்காக அவர்களிடமிருந்து காசு வாங்கிவந்த முறை கோயில் களைக்கூடப் பிசினஸ் நிலையங்களாக மாற்றியுள்ளதையே குறிக்கும் என்று காந்தி சொல்வது உண்டு. ஆகவே, தீண்டத் தகாதவர்கள் என்று எவருமே கிடையாது: எல்லோருக்கும் இறைவன் திருக்கோயில்கள் திறந்து விடப்பட வேண்டும் என்று மகாத்மா காந்திஜி அறிவித்து, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டதும், காந்திமதி நாதனும் உற்சாகம் அடைந்தான். ஊக்கத் தோடு பாடுபட்டான். திருநகரின் பெரிய கோயில்