பக்கம்:வீடும் வெளியும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வீடும் வெளியும் 2 இறந்து விடப்பட்டதை அவன் ஒரு வெற்றித் திரு. விழாவாகவே மதித்தான். அன்று பூஜைகள் முடிந்து, பக்தர்கள் அவரவர் அலுவல்களைக் கவனிக்கத் திரும்பியதும், காந்தி சிறிது தங்கினுன். அன்னத்திடம் முன் தினம் அறிவித்தது. போல் அவன் அம்மாவைக் கான வீட்டுக்குப் போயாக வேண்டும். இந்தினைப்பு அவன் உள்ளத்தில் பலவித உணர்ச்சிச் சின்னங்கள் ஏற்படுத்தியது போகாமல் இருப்பதும் நல்லதல்ல என்று அவன் அறிவு கூறியது. பிற்கு துணிந்து, அப்பா கோபித்துக் கார் வார் பண்ணி குல் பிறகு பொறுமையோடு ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் என்று தீர்மானித்து அவன் தன் வீடு: நோக்கி நடத்தான். தனது வீட்டுக்குப் போவதற்கு அவன் இவ்வாறு தயக்கமும் குழப்பமும் அனுபவிக்க நேரிட்டுள்ளதே. என்ற விசித்திர நிலை காந்திக்கு வேடிக்கையாகப் பட வில்வே வேதனைதான் தந்தது. வீடு என்பது நினைத் தாலே இனிய உணர்வுகளுக்கு வகை செய்யும் சிறந்த இடம்: ஒருவனுக்கு எல்லாச் சமயங்களிலும் நல்ல பாதுகாப்பாகவும் பலமாகவும் விளங்கக்கூடிய-விளங்க வேண்டிய-உறைவிடம். அது அவனுக்கு வேண்டாத' ஒரு இட்மாக மாறிவிட்டதே காலத்தின் சதியை எண் ணி அவன் பெருமூச்செறிந்தான. அவன் அம்மா அவனேப் பெருமகிழ்ச்சியோடு வர வேற்பாள் என்பதில் ஐயமில்லை. கண்ணிர் சிந்தி, உருக்கத்தோடு புலம்புவா ள். அதை எல்லாம் கண்டால் அவன் தந்தை கோரதாண்டவம் ஆடித் தீர்த்து விடுவாரே அதுதான் அவனுக்குத் தயக்கமும் கலவரமும் அளித்தது, - "அநேகமாக அவர் வீட்டில் இருக்கமாட்டார். அவர் சாப்பாட்டுக்கு வருவதற்குள் நான் வீட்டை விட்டுக் கிளம்பி விடலாம்” என்று முடிவு செய்து அவன் வீட்டை அடைந்தான்.