பக்கம்:வீடும் வெளியும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 வீடும் வெளியும் முன் வைத்தாள். உட்கார்ந்து சாப்பிடுங்க” என்று உபசரித்தாள். - "நிற்கிறியே காந்தி. உட்காரு சாப்பிடு” என்று கூறி அம்மா ஒரு சுவர் அருகில் அமர்ந்து சாய்ந்து கொண் டாள். அன்னம் உள் வாசல் படி அருகில் நின்று கவனிப்பதில் ஈடுபட்டாள். காந்தி. நீ உன் மனம் போல நடந்து கொள்வது சரிதான். நாட்டுக்கு பாடுபடப் போறேன்னு கிளம்பி விட்டே. நான் தடுத்தால் கண்டா நீ நின்றுவிடப் போறியா? அது இல்லே ஆளுல், உனக்கு வீட்டு ஞாபகம் அடியோடு இல்லாமலா போயிடனும்?' என்று தாய் மெதுவாகப் பேசினுள். "நான் என்னம்மா செய்றது? அப்பாவின் கண்டிப்புத் தான் உனக்குத் தெரியுமே. அப்பாதானே என்னை வீட்டை விட்டு வெளியே விரட்டினது?’ என்று அவன் சொன்னன். "ஒரு தரம் விரட்டிய பிறகும், மானம் இல்லாமல், திறந்த வீட்டில் எதுவோ நுழைகிற மாதிரி, திரும்ப வத்துட்டியாக்கும் ?” எதிர்பாராத விதத்தில் வெடித்தது அப்பாவின் உறுமல், செந்தில் நாயகம் அப்போது வீடு திரும்பும் வேளே இல்லைதான். அன்று அவருக்கு மனசே சரியில்லை. உடம்புக்கும் குதுகுதுன்னு வர்ற மாதிரி இருந்தது. அதனுலே வீட்டுக் குப் போய் கொஞ்சம் சுக்கு வெந் நீர் தயாரிக்கச் செய்து குடித்துவிட்டு, சிறிது நேரம் படுக்கையில் கிடந்து புரண்டு எழவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது வந்தார் வருகிற வழியிலேயே அவருடைய புத்திர பாக்கியம் வீட்டுக்கு வந்துள்ள சேதி காதில் விழுந்தது. கோயில் நிகழ்ச்சி பற்றிய விவரங்களும் தெரிந்தன. அவர் உள்ளத்தில் எரிச்சல் ஏற்பட்டது.

  • Gւյքայ சீர்திருத்தவாதி! கிளம்பியிருக்காரு! ஹஅங்! பிழைக்கத் தெரியாத பயல்' என்று முதலாளி முணுமுணுத்தார். வீட்டு வாசலில் கால் வைத்த