பக்கம்:வீடும் வெளியும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ8 வீடும் வெளியும் திட்டம் நின்ற பிறகு குறைந்து விட்டதாகவே தோன்றி பது. நாம் இன்னும் நமது லட்சியத்தை விடவில்லை. அதற்காக நாம் இன்னும் எவ்வளவோ பாடுபட்ட க வேண்டும். தியாகங்கள் செய்தாக வேன்டும்' என்று தலைவர்களும், கட்சிப் பிரசங்கிகளும் ஊர் ஊராக, வீதி வீதியாக முழக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட் டது. பட்டணங்களிலும் பட்டி தொட்டிகளிலும் அவர் களுக்கு வேலை நிறையவே இருந்தது. அரசியல் கிளர்ச்சியாக மாத்திரமே விடுதலை இயக் கத்தை மகாத்மா காந்திஜி வகுத்து விடவில்லை. சமூக சீர்திருத்த இயக்கமாகவும், தனிமனித ஆன்ம உயர்வுக்கு வகை செய்யும் சாதனமாகவும் அவர் அதை உருவாக்கு வதில் ஆர்வம் காட்டினர். உழைப்பின் உயர்வை போதிப்பதற்காக, நூல் நூற்றல் தனது இருப்பிடத்தை யும் சூழ்நிலையையும் சுத்தம் செய்தல் போன்ற காரியங் க; அவரவரே செய்தாக வேண்டும் என்று அவர் வற். புறுத்தினர். அவற்றிலே நம்பிக்கை கொண்டவர்கள் அவ்வாறே பின்பற்றிஞர்கள். தொண்டர் நாதனும் அவருடைய சகாக்களும் தீவிரமாக இச்செயல் திட்டங்களில் ஈடு பட்டார்கள். - காந்திமதிநாதனும் இவற்றில் ஆர்வம் காட்டினன். அவனும் மற்றும் சிலரும் சேர்ந்து, கதர் துணிகளை மூட்டைக் கட்டிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று விற். பனை செய்தார்கள். பொது இடங்களைச் சுத்தம் செய்வது, மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு முதலியன பற்றியும் பிரசாரம் பண்ணிஞர்கள். வெறும் பேச்சளவிலேயே தங்கள் உற்சாகத்தைக் காட்டிவிட்டுப் போவது தொண்டர் நாதனுக்கும் காந் திக்கும் அவர்களைப் போன்ற உண்மையான தேசபக்தர் களுக்கும் பிடிக்காத விஷயங்கள். எனவே, அவர்களே அநேக இடங்களில் தெருக்களைக் கூட்டி தோட்டி வேலை செய்தார்கள். சில ஊர்களில், தெருக்களில் பந்தி பரப்பி தோட்டிகளைப் பரிமாற வைத்து சமயத்தி