பக்கம்:வீடும் வெளியும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடும் வெளியும் 警器 இத்தவிதமாகப் பணம் திரட்டிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேதான் மேடை முதலாளி'யும் காந்தி மதிநாதனும் மோதிக்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. மேடை முதலாளி மகன் திருமலையும் அவனைப் போன்ற இரண்டு மூன்று பேரும் பணம் வசூலித்தார்கள். அவர்கள் உல்லாசப் பேர்வழிகள். பணத்தைச் செலவு செய்வதற்குத் தியக்கமோ கூச்சமோ .ெ க ரி ன் வா மாட்டார்கள், "பணம் என்பதே செலவு செய்வதற்காக ஏற்பட்டது தானே! இதில் உன் பணம் என் பணம் என்று பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? நம் கையில் பணம் இருக் கிறது. .ெ ச ல வு க ள் முகமலர்ச்சியோடு எதிர்ப்படு கின்றன. அள்ளி விடு! ஜாலி பண்ணு!’-இதுதான் திருமலையின் தத்துவம். அதை அவன் கையாளத் தவறுவதும் கிடையாது அவன் தந்தை அவனுக்கு மாதம் தோறும் இவ்வளவு பனம் என்று ஒரு தொகை தந்து கொண்டுதான் இருத் தார். ஆனல் மனம்போல் செலவு செய்வதற்கு வாய்ப்பு கள் மலிந்த நாகரிக நகரத்திலே, தாராளமாகச் செலவு பண்ணி இன்பம் காணும் மனம் படைத்தவனுக்கு அச் சிறு தொகை எந்த மூலைக்கு ஆகவே அவன் அங்கு மிங்கும் கடன்வாங்கத் தயங்குவதில்லை. இப்போது நிதிவசூல்' என்ற பெயரில் அவன் கையில் பணப் புழக்கம் ஏற்பட்டதும், மனசின் செல்லரிப் பும் அதிகரித்தது. திருமலையும், அவன் நண்பர்களும் காசு வைத்துச் சீட்டாடுவதில் ருசி கண்டவர்கள். இப்பொழுதும் அவ் விளையாட்டு அவர்களே வசீகரிக்கத்தான் செய்தது. யார் காசோ, எவர் பணமோ, எதற்காகச் சேகரிக்கப் பட்டதோ? அதைப்பற்றி அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா? கவலைப்பட்டால் காரியம் நடக் குமா? உல்லாசமாக நாளோட்டத்தான் இயலுமா? விளையாட்டில் பணம் புரண்டது. நிதி கரைந்தது.