பக்கம்:வீடும் வெளியும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?6 விடும் வெளியும் பணம் போனது பற்றிக்கூட அவன் பெரியதாக வருத்தப்படவில்லே. உ. ய ர் ந் த நோக்கங்களோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள மாபெரும் இயக்கத்துக்கே தனி ஒருவனின் சிறுமைச் செயல் மூலம் களங்கம் ஏற்பட்டு விடுகிறதே என்று அவன் வேதனைப்பட்டான். திரு மலேயைப் போன்று மனச்சாட்சி இல்லாதவர்கள், நியாயம், நேர்மை, உண்மை, உணர்வு எதுவும் இல்லா தவர்கள், மகாத்மாவின் மாண்புக்கு இழுக்குத் தேடி வைக்கத்தான் உதவுவார்கள் என்று அவன் துயருற்ருன். தொண்டர் நாதன் இது குறித்துக் கண்டிப்புக் கூட்டம் நடத்த வேண்டும் ஏதாவது செய்து திருநகர் குழுவின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று துடி துடித்தார். "அதெல்லாம் வீண் ஆர்ப்பாட்டமாகும். நம்ம ஊரின் பெயர் மேலும் அடிபடுவதற்கு நாமே வழி அமைப்பது போலாகும். என்னவோ, நடந்தது நடந்து போக்க நாம் ஏன் தமுக்கு அடிச்சுக்கிட்டு இருக்கணும்? திருமலை மூலம் நிதிக்கு நஷ்டம் எவ்வளவு ஏற்பட்டிருக் கும் முந்துாறு ரூபாய் இருக்குமா? அதை நான் தந்து விடுகிறேன். இதை இப்படியே விட்டு விடுவோம்’ என்ருர் பிறவிப் பெருமாள். "அவர் சொல்வது சரிதான். வீணுக நாம் ஏன் முதலாளி பெயரையும் நம் ஊர் பெயரையும் களங்கப் படுத்த வேனும்?' என்று பலரும் அபிப்பிராயப் பட்டார்கள்.

பனமா முக்கியம்? பொதுப் பணத்தை யாரும் இஷ்டம் போல் கையாடுவது என்ருகி விட்டால் நம் இயக்கத்தின் மதிப்பு என்ன ஆவது? முதலில் தாறு மாருகச் செலவு செய்து போடுவோம்; அப்புறம் ஈடு பண்ணி விடலாம் என்று வழி ஏற்பட்டுவிட்டால், ஒழுக்கம், கட்டுப்பாடு, தர்ம நியாயம் எல்லாம் என்னத் துக்கு?’ எ ன் று காந்திமதிநாதன் ஆவேசமாகப் பேசிஞன்.

தாதி 8