பக்கம்:வீடும் வெளியும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 77 அவர்களுடைய குரல் எடுபடவில்லை, மேடை முதலாளி தாராளமாக ஐந்நூறு ரூபாய் கொடுத்து விஷயத்தை சுமுகமாக முடித்து விட்டார். அவருக்குத் திருப்திதான். காந்திக்கு மனசே நன்ருக இல்லாமல் போய் விட்டது. இது அபூர்வமாக நிகழக்கூடிய ஒரு விஷயம்தான். ஆளுல், நல்ல பசுமையான மரத்தில் புல்லுருவி பாய்வது போல், உன்னதமான லட்சியங்களைக் கொண்ட மாபெரும் இயக்கத்தில் இவ்விதமான சிறு விஷச் சக்தி கள் படிவது காலப் போக்கில் விபரீதமான விளைவு களுக்கு வழிகோலும் என்று அவன் எண்ணினன்.

  • தன் லட்சியத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிற பெரு நதியில் சாக்கடைகளும், இதர விதக் கழிவு நீரோட்டங்களும் வந்து கலப்பது இயல்பு; அதளுல் நதியின் பெயரோ புனிதமோ கெட்டு விடுவ தில்லை; மாபெரும் இயக்கங்களின் நிலைமையும் அதைப் போன்றதுதான். இவ்வாறே நாம் ஆறுதல் கொள்ள வேண்டியிருக்கிறது. நம்மைப் பொறுத்த வரையில் நாம் நேர்மையாளர்களாக வாழ முயற்சிப் போம். நம் போன்றவர்கள் வேறு என்ன செய்ய முடியும்?’ என்று கூறினர் தொண்டர் நாதன்.

அவர் பேச்சிலும் உ ண் ைம இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு இருப்பினும் அதை ஏற்றுக் கொண்டு படிந்து போக மனம் இடம் கொடுக்கவில்லை.

சே! பணம் இருந்தால் என்ன வேண்டுமானலும்

செய்யலாம் என்று ஏற்பட்டு விடுகிறது. பணத்துக்கு எல்லோரும் மயங்குகிருர்களே' என்று அவன் வருத்தப் பட்டான். 'உலகம் அறியாத பிள்ளை அப்பா நீ! வாழ்க்கையில் அடிபட்டுத் தேறவேண்டும். போகப் போக உன் மனசும் :பக்குவத்துக்கு வந்து விடும்’ என்று ஒருவர் சொன்னர்.