பக்கம்:வீடும் வெளியும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடும் வெளியும் அதனுல் அவர் சமூகத்தில் அவருக்கு எளிதில் பெண்ணும் கிடைத்தது. பணத்தைக் காட்டி மயக்குகிறவர்களும், அதில் மயங்குகிறவர்களும் எங்கும் என்றும் இருப்பார்கள் போலும்!" என்று எண்ணிப் பெருமூச்செறிந்தான் காந்திமதிநாதன். வே. த னை நடுவிலும் எல்லாம் வேடிக்கையாகவும் தோன்றின அவனுக்கு. 16. அனுபவ அதிர்ச்சி இாழ்க்கையில் சோதனைகள் எதிர்பட்டுக்கொண்டே தானிருக்கும். அவற்றை ஏற்று, தாக்குப் பிடித்து வெற்றி பெறுவதோ, அல்லது அவற்றின் முன்னே மனம் குலைந்து சோர்வுற்று விடுவதோ அவரவர் இயல்பையும் நெஞ்சுறுதியையும் பொறுத்ததாகும். சுகமாக வாழ்ந்து, கவலையில்லாமல் பொழுது போக்கிக் காலம் கழித்து வந்த காந்திமதிநாதன் சூழ்நிலை காரணமாக, சந்தர்ப்பவசத்தால், உணர்ச்சித் துரண்டு தலால் சிக்கல்களிலும் குழப்பங்களிலும் ஈடுபட நேரிட். டது. அதனுல் வீட்டை துறக்கவும் தந்தையின் வெறுப்பையும் விரோதத்தையும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டியதாயிற்று. இவற்றுக்காக அவன் மனத்துயரம் அடையவில்லை. அவன் தவறு எதுவும் செய்யவில்லையே? நாட்டின் விடுதலைக்காகவும் நாட்டு மக்களின் நன்மைக்காகவும். காடுபடுவதை லட்சியமாகக் கொண்டது, சுய நலக் காரர்களால் தவருன போக்கு என்று கருதப்படுமானல், அவர்களின் விருப்பு வெறுப்புகளே அவன் ஏன் பெரிது படுத்த வேண்டும்? இதன் பயணுக அவன் சொத்துரிமை இழக்க நேர்ந்தது என்ருல் அது அவனுடைய தந்தையின் சிறுமையைத்தான் காட்டுகிறதே தவிர, அவனுக்கு. பெரிய நஷ்டம் இல்லை. ஏழைகள் மிகுந்த தரித்திர நாட்டிலே ஏழமை வாழ்வுதான் சகஜமானது. இவ்வாறு காந்திமதியின் உள்ளம் பேசியது.