பக்கம்:வீடும் வெளியும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

尋螺 வீடும் வெளியும் இல்லை யில்லை. நான் போய் விடுகிறேன்' என்று காந்தி மறுத்துரைத்தான். 'அப்பா அம்மா , சண்டை பிடிபடாங்களா? அவங்க கோபத்துக்கு பயப்படுகிற, பிள்ளை யாகத் தெரியவியே உன்னைப் பார்த்தால்! அப்படி யாப்பட்ட பிள்ளேயாக இருந்தால் இந்த நேரத்துக்கு ஆற்றங்கரையிலே நின்றுகொண்டு துள்ளி வருகுது வேல்னு கூப்பாடு போடுவியா' என்று சொல்லி, அற்புத மான ஹாஸ்ய விருந்து படைத்து விட்டவன் போல் அவனுகவே சிரித்துக் கொண்டான். சோமு தன்னைப்பற்றி எதுவுமே அறிந்து கொண் டிருக்கவில்லை என்பதை அவன் பேச்சு மூலம் உணர்ந்த காத்தி, அவன் அறியாமையைப் போக்கிவிட ஆர்வம் காட்டவில்லை. 'என்னேப் பற்றி இவன் தெரிந்து கொள்வதும் ஒன்றுதான். தெரியாமல் இருப்பதும். ஒன்றேதான்!” என அவன் தீர்மானித்தான். - எண்ணத்தால் சோமுவை ஒதுக்கிவிட முடிந்தது. போல், செயலினுல் அவனை விலக்கிவிட இயலாத காந்தி அவளுேடு அவன் வீட்டிற்கு போக வேண்டியதாயிற்று. அது சிறு வீடுதான். ஆனல் வசதிகள் நிறைந்து காணப்பட்டது. சோமு செளகர்யமாக வாழ்க்கை நடத்துகிருன் என்பதை அச் சூழ்நிலை நன்கு விளம்பரப் படுத்தியது. உட்காருவதற்கு நாற்காலிகள், படுத் துறங்கக் கட்டில் மெத்தை அருமையான கடிகாரம், சுகமான காற்றுக்கு வசதி செய்யும் மின்சார விசிறி; "பரவாயில்லையே, சோமு வாழ்க்கையை அனுபவிக்கக் கற்றிருக்கிருன். அதற்கு ஏற்ற வரும்படி இருக்குது போல்தான் தெரியுது. மோட்டார் முதலாளியை சரியானபடி குழையடித்து, கைக்குள் வச்சிருப்பான் போலிருக்கு' என்ற எண்ணம் காந்திக்கு இயல்பாக உண்டாயிற்று. அங்கே உள்வாசல் படி அருகே, விளக்கு வெளிச் சத்தில் நின்ற ஒரு பெண் காந்தியின் கவனத்தைக் கவர்ந்தாள். குறுகுறுக்கும் விழிகளைக் கொண்ட யுவதி. அவளே முத்ல் முறை சாதாரணமாகப் பார்த்தான்