பக்கம்:வீடும் வெளியும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 (? வீடும் வெளியும் கள் மூலமும் காந்தியும் அவன் நண்பர்களும் அறிந்து கொண்டார்கள். மேலும் மேலும் அறிவு வளர்ச்சி பெறவும், பேச்சுப் பயிற்சி பெறவும் காந்தியும் மற்றச் சிலரும்கூடி திரு. நகர் இளைஞர் மன்றம்’ என்று ஒன்றை நிறுவினர்கள். வார: தோறும் ஏதேனும் ஒரு பிரச்னையை எடுத்துக் கொண்டு காரசாரமாக விவாதித்தார்கள். பத்திரிகை கள் பலவற்றையும் வாங்கிப் படித்தார்கள். கல்வி அறிவைப் பரப்புவதற்குத் தங்களால் இயன்ற தொண்டு புரிய வேண்டும் என்று திட்டமிட்டார்கள். முதியோர் கல்விக்கு வசதியாக இரவு நேரப் பள்ளி' நடத்த முன் வந்தார்கள் அவர்கள். சிறு பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி கற்பிக்க வசதி செய்தார்கள். காந்தியும் இவற்றில் தீவிரமான பங்கு ஏற்றுச் செயல் புரியலாளுன். தொண்டர் நாதன் முதியோருக்குக் கல்வி பயிற்று. வதில் ஆர்வம் காட்டினர். இந்தி மொழியைக் கற்றுக் கொண்டு. மற்றவர்களுக்கு அதைப் போதிப்பதில் அவர் அக்கறை கொண்டார். r தேர்தல் வெற்றிகரமாக நிறைவேறி, தேசிய இயக் கத்தினர் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து தங்களால் இயன்றவரைச் செய்து வந்தனர். அவர்களுடைய செயல்களுக்கு வரவேற்பு இருந்தது: எதிர்ப்பும் வளர்ந்து வந்தது. முக்கியமாக, இந்தி மொழித் திணிப்புக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. திருநகரிலும் அந்த எதிர்ப்பு வேகமாகப் பரவியது. அந்த எதிர்ப்புக்கு மாற்ருக இந்தி மொழிப் பிரசாரம் செய்ய வேண்டியது தங்கள் கடமை என்று தொண்டர் நாதன் போன்றவர்கள் கருதினர்கள். எதிர்ப்புக்கு எதிர்ப்புக் காட்டுவதனால் மட்டும் பய னில்லை; மக்களிடம் தாய் மொழிப் பற்றை வளர்க்க வேண்டியது அவசியம் என்று காந்தி எண்ணினன். தாய்மொழி உரிய முறையில் போற்றப்படவில்லை; பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தமின்ழ் அலட்சியம்