பக்கம்:வீடும் வெளியும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடும் வெளியும் 93. காட்டவில்லை என்ருல், நீங்களே திருத்த முற்படுங்கள். காந்தி வழியிலேயே-அறவழியிலேயே இதையும் செய்ய லாமே என்று அந்த அறிஞர் கூறினர். காந்திமதிநாதனுக்கும், அவனைப் போன்ற உற்சாக மும் செயலூக்கமும் பெற்றிருந்த இளைஞர்கள் பலருக் கும் ஆறிஞரின் யோசனை அருமையான செயல் திட்ட மாகத் தோன்றியது. அவர்கள் மறுநாளே செயலாற்றத் துணிந்து கிளம்பினர்கள். சில கடைக்காரர்கள் நாங்கள் பலகை மாற்றுகிற போது திருத்தி, எழுதிக் கொள்கிருேம்” என்று சொன் ர்ைகள். சிலர் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். அதை ஏன் திருத்த வேண்டும்?' என்று எரிந்து விழுந் தார்கள். சிலர் ஏசினர்கள். இளைஞர் மன்றத்தினர் உற்சாகத்தை விட்டுவிட வில்லை. இரவோடு இரவாக, அநேகப் பலகைளில் திருத் தம் செய்து வைத்தார்கள். மறுநாள், தங்கள் பலகை களே வால் பயல்கள்' அசிங்கப்படுத்தி விட்டார்கள் என்று சொந்தக்காரர்கள் ஏசினர்கள். அதற்காக இளே ஞர்கள் வருத்தப்படவில்லை. நிதானமாகச் சிந்தித்கிறபோது, ஒவ்வொருவரும் நற்பணி புரிவதற்கு எத்தனை எத்தனையோ வழிகள் இருக் கின்றன ; செயல் புரிவதற்கு மனமும் துணிச்சலும் வேண்டும்; இவைதான் முக்கியம் என்று காந்திக்குத் தோன்றியது. தன்னல் இயன்ற பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டியது அவசியம் என்று அவன் உறுதி பூண்டான். அவன் சிந்தனையில் சலனம் ஏற்படுத்துவதற்கு மற்று மொரு சந்திர்ப்பமும் வந்து சேர்ந்தது. அவனுடைய நண்பன் நடராஜன் திடீரென ஒருநாள் வந்து நின்ருன் அவன் முன்னே. சில வருஷங்களுக்கு முன்பு, சத்தியாக்கிரக சமயத்தில், அவனைப் பிரிந்து வீட்டை விட்டு வெளியேறிய நண்பன்தான். ஆனல் அவனுடன் விபேசப்