பக்கம்:வீடும் வெளியும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ வீடும் வெளியும் திகுந்த போராட்ட முறைகள் எவை என்பதை மகாத்மா காந்தி அறிந்துதான் தமது செயல் திட்டங்களை வகுக் கிருர் வழி காட்டுகிருர். அவருடைய போக்கு, புரியர மல் இருக்கலாம்; பிடிக்காமலும் இருக்கலாம். ஆனல் அவர் நாட்டுக்கு நிச்சயம் சுதந்திரம் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கும். மக்களுக்கும் இருக்கிறது” என்று அவன் சொன்னன். 'இருக்கலாம். ஆனல் அவர் வழியில் வேகமும் விறு விறுப்பும் இல்லை; அரசியலில் அளவுக்கு அதிகமாக மதத் தைப் புகுத்தி விட்டார் என்பதுதான் என் குறைபாடு” என்று நடராஜன் கூறினன். பாரதம் முழுவதும் அரசியல் விழிப்பு ஏற்பட்டு, விடுதலை இயக்கம் விறு விறுப்பாகச் செயலாற்றி, கால ஒட்டத்தில் மந்த கதி பெற்று மெதுநடை போட்ட தாவே தோன்றியது. கவர்ச்சிகரமான அரசியல் தத்து வங்களும், கோஷங்களும் வாலிப சமுதாயத்தை வசீகரிக் கத்தோடங்கின. தேசிய இயக்கத்தில் கலந்துகொண்டு தீவிரமாகச் செயலாற்றிய சிலர்கூட சிந்தனை விழிப்பு பெற்று, மனம் மாறி வேறு முகாம்களை நாடினர். நண்பன் நடராஜனும் அவ்விதம் பாதை மாறிப் பயணம் செய்ய ஆரம்பித்து விட்டாலும் ஆச்சர்யப்படு வதற்கில்லை என்று காந்தி நினைத்தான். திருநகர் இளை ஞர் மன்றம்' தீவிர லட்சியங்களே ஏற்றுக்கொண்டு பணி யாற்ற வேண்டும் , வாலிபர்கள் உடல் பயிற்சி மூலம் வலிமை பற்ருக வேண்டும்! அதற்காக தேகப்பயிற்சிக் கூடங்கள் அமைக்க வேண்டும் என்று நடராஜன் கூறி, தன் திட்டங்களை விவரிக்க ஆரம்பிக்க்வும் காந்தியின் சந்தேகங்கள் வலுப்பெற்றன. "எங்களுக்கு இந்த முறை போதுமாப்பா!' என்று சிரித்தபடி சொன்னர் காந்தி. . "சுத்து விளக்கெண்ணெய் வழிதான் கூடிய சீக்கிாம் பார். பெரிய மாறுதல்கள் ஏற்படப் போகின்றன. நான் ஒரு பத்திரிகை நடத்தப் போகிறேன். பக்கத்துக்குப்