பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீரத் தலைவர் பூலித்தேவர்

9


தான்; கும்பினியின் ஆயிரம் சிப்பாய்களும் நவாபுவின் அறுநூறு குதிரை வீரர்களும் போதமாட்டார்கள் என்று மேலும் ஒரு பெரும்படையைத் தானே திரட்டினான்.

திருவாங்கூர்ப்படை களக்காட்டை நெருங்கியது. பூலித்தேவரும் அதனுடன் சேர்ந்துகொண்டார். இரு பெரும்படைகளுடன் நவாபுவின் படை மோதியது; முறிந்தது; நவாபுவின் வீரர்கள் புறக் காட்டிய வண்ணம் தலைதெறிக்க ஓடினார்கள். வேகமாக ஓடுவதற்குத் தடையாய் இருக்கிறது என்று துப்பாக்கிகளை எல்லாம் அவர்கள் வீசி எறிந்துவிட்டுச் சென்றார்கள். பூலித்தேவரின் படைகள் 'கண்டோம்! கொண்டோம்!' என்று அவற்றை ஒன்று விடாமல் கவர்ந்துகொண்டன.17 உடனே மூடேமியா அப்போதைக்கு நவாபுவின் வசம் இருந்த களக்காட்டுக் கோட்டையைத் தாக்கினான். வெற்றி தலைவாயிலைத் தட்டும் நேரத்தில் கூலிக்கு மாரடிக்க வந்த திருவாங்கூர்ப்படை காரணமின்றி ஓடிவிட் டது. வேறு வழியின்றி அதனுடன் மூடேமியாவும் ஓடிவிட்டான். இடமும் காலமும் அறிதலில் வல்ல பூலித்தேவர், தம் உறைவிடமாகிய நெற்கட்டுஞ் - செவ்வலுக்குத் திரும்பிவிட்டார். இந்நிகழ்ச்சிகளை எண்ணி - மாபூஸ்கான் ஆகாயக்கோட்டை கட்டினான். ஆனால், உடனே மூடேமியா திருவாங்கூர்ப்படையுடன் வந்து, களக்காட்டைத் தாக்கிக் கைப்பற்றினான். இவ்வெற்றிக்குப் பூலித்தேவரும் பெருந்துணை புரிந்தார். எதிர்த்து வந்த நவாபுவின் படை நையப்புடைக்கப்பட்டது. இருநூறு குதிரை வீரர்