பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

33




பட்டது. குண்டுகளால் துளைக்கப்பட்ட நேரத்தில் கோட்டைக்கு உள்ளிருந்த வீரர்கள் மிகுந்த வீரக் துடன் தங்களைத்தாங்களே காத்துக்கொண்டார்கள். அனல் கக்கும் குண்டுகளைச் சற்றும் பொருட்படுத் தாமலும் சாவுக்குச் சிறிதும் அஞ்சாமலும் கோட்டை களில் ஒட்டைகள் ஏற்படாத வண்ணம் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் கர்னல் காம்பெலே வியப்புக் கடலில் ஆழ்த்தின. மாற்ருளின் நெருப்பு மழையைச் சகித்துக்கொண்டு அவர்கள் சற்றும் அமைதியை இழக்காமல் சுறுசுறுப்போடு பனைமரத் துண் டங்களே யும் வைக்கோற்போரையும் துணே யாகக்கொண்டு கோட்டைகளில் அவ்வப்போது ஏற் பட்ட பிளவுகளை அடைத்த வண்ணம் இருந்தார்கள். ஒரு வாரப் பெருமுயற்சிக்குப் பின் ஒரு நாள் விடியற்காலையில் கோட்டையை அது வரை காத்த வீரர்கள் கோட்டையை விட்டு வெளியேறினர்கள். பலத்த மழை காரணமாக அவர்கள் மூன்று திசை களில் ஒடி அருகிலிருந்த காட்டிற்குள் புகுந்தார்கள். அவர்களுக்குக் கர்னல் படையால் ஏற்பட்ட சேதம் மிகக் குறைவு. கோட்டை அளவிற் சிறியதாய் இருந்தாலும், பலத்தில் பெரியது என்பது கர்னல் காம்பெலின் கருத்து. திருநெல்வேலி மாவட்டத்திலேயே மிக்க பலம் வாய்ந்த கோட்டையெனக் கர்னல் காம்பெலால் கருதப்பட்ட இக்கோட்டைக்கு அவ்வளவு பலம் இருக்கதற்குக் காரணம் இதன் இட அமைப்பே யாகும். கோட்டைக்கு 1800 கெஜத்தில் பெருங்காடு; அதற்குப் பின்னே உயர்ந்த மேற்கு மலைத்தொடர்.