பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

47



இருப்பிடத்தைத் தாக் குவ த ற் கா ன முயற்சி செய்யப்பட்டது. ஆல்ை, அதற்குள் ஹீரானின் படை முழுவதும் திருச்சிக்கு அழைக்கப்பட்டுவிட் டது. எனினும், ஒரு படைப்பிரிவு ஆரல்வாய்மொழி மலைத்தொடருக்கு 6 மைல் தொலைவிலுள்ள கிலக் கோட்டை என்னும் கோட்டையைத் தாக்க அனுப் பப்பட்டது. இந்த இடம் மிகக் கோரமான முறை யில் கைப்பற்றப்பட்டது. இங்கேயிருந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட எல்லா மக்களும் வாளாலே வெட்டித் தீர்க்கப்பட்டார்கள். மதுரைக் குத் திரும்பும் பாதையில் கர்னல் ஹீரான் சங்கர நயினர் கோயில் பகு தி யி ன் பெரும்பாளையக் காரரான பூலித்தேவரின் தலைமையிருப்பிடமாகிய நெற்கட்டுஞ்செவ்வலேத் தாக்கினன். ஆனல், அந்த முயற்சி தோல்வியடைந்தது. ஹீரானின் படை மதுரைக்குத் திரும்பியது. பக்கம் 376, (2) 1755-ஆம் ஆண்டு கர்னல் ஹீரான் படை யெடுத்த பொழுது எட்டையபுரத்தாரிடமிருந்தும் பாஞ்சாலங்குறிச்சியாரிடமிருந்தும் கப்பப் பணம் கேட்கப்பட்டது; நன்னடத்தைக்கான ஆள் பிணே யும் கேட்கப்பட்டது. அதற்கு இணங்கி எட்டைய புரத்தாரும் பாஞ்சாலங்குறிச்சியாரும் கப்பம் கட்டி னர்; ஆள் பிணேயும் கொடுத்தனர். இக்காரணத் திேைலயே 1756-ஆம் ஆண்டில் பூலித்தேவர் ஒரு பெருங்கூட்டணியை உருவாக்கிய நேரத்தில் அதில் எட்டையபுரம் பாஞ்சாலங்குறிச்சித் தலைவர்கள் சேராமலிருந்தார்கள் என்பது தெளிவு.