பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

வீரத் தலைவர் பூலித்தேவர்



பக்கம் 387-8. (8) வரலாறு அறியப் பாஞ்சாலங்குறிச்சியின் பழமையான பாளையக்காரர் அரியணேயிலமர்ந்தது 1709-ஆம் ஆண்டில். இவருக்கு எதிராகவே 1755ஆம் ஆண்டில் பல்வேறு படையெடுப்புக்களுக்கும் தலைமை தாங்கும் முதல் படையெடுப்புத் தொடங்கி யது. கர்னல் ஹீரானே இப்படையெடுப்பின் தலை வன். இவனே திருநெல்வேலியுள் நுழைந்த முதல் பிரிட்டிஷ் தளபதி. பாஞ்சாலங்குறிச்சியை எதிர்த் துக் கர்னல் ஹீரான் படையெடுத்தது அரைமனத் தோடு செய்த செயலே. பாஞ்சாலங்குறிச்சியை அவன் படைகள் நெருங்கவ்ே இல்லே. படை தன் திசை நோக்கி வந்ததும் கட்டபொம்மு நாயக்கன் தன் கப்பப் பணத்தில் ஒரு பகுதியை அனுப்பிவிட் டான். இதை வாங்குவதுதான் அப்படையெடுப் பின் நோக்கம். எனவே, தொகை கிடைத்ததும் துருப்புக்கள் திரும்பின. பக்கம் 73-.ே (4) மேற்குத்திசைப் பாளையங்களின் தலைவரா கிய பூலித்தேவர் கிழக்குத்திசைப் பாளையங்களின் கோழர்களோடு சேர்ந்து ஒரு பெருங்கூட்டணியை உருவாக்க முயன்றர். அப்போது கிழக்குத்திசைப் பாளையங்களின் தலைவன் கட்டபொம்மு நாயக்கன். அவனும் அவன் ஆட்சிக் குட்பட்ட வகிைய எட்டையபுரத்தானும் இக்கூட்டணியில் சேர மறுத் தனர். இதற்கு மாருக மதுரை பாளையக்காரர்கள் கூட்டணியில் சோ உறுதி தெரிவித்தனர். ஒடு