பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/6

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

iv

                     iv

தின் ஏடுகள் என்று சொல்லத்தகும் கல்வெட்டுக்கள் தமிழ் நாட்டில் ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. ஊர் தோறும் கோயில்களைப் பெற்ற தமிழ் நாட்டில், கோயில் தோறும் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு பிற்கால வரலாற்றை விரிவாக எழுதலாம். நம்முடைய சென்னே அரசாங்கம் தனியே இத்துறையில் ஊக்கத்தை மேற்கொண்டு, முதன்முதலில் கருவிகளேத் தொகுக்கச் செய்து, விரிவான வரலாற்றை உருவாக்கும் வகையைத் திட்டமிட வேண்டும்.

அன்பர் திரு. ந. சஞ்சீவி பூலித்தேவரைப்பற்றி எழுதி யிருக்கும் கட்டுரை இத்தகைய எண்ணங்களே உண் டசக்கியது. பட்டாக்காரர்கள், பாளேயக்காரர்கள், நாட் டாண்மைக்காரர்கள், வேளிர்கள், குறுகில மன்னர்கள் என்று தமிழ் காட்டில் அங்கங்கே வாழ்ந்து பல அரிய வீரச் செயல்களேச் செய்தும் வண்மைச் செயல் புரிந்தும் வாழ்ந்தவர்களுடைய வரலாற்றைத் தொகுத்தால் எவ் வளவோ அரிய கிகழ்ச்சிகளே அறியலாம். பூலித்தேவ ரின் வரலாற்றிள் பிற்பகுதியை இவ்விதழில் காணலாம்.

                       -மார்ச்சு, 1958
          *               *           *