பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

வீரத் தலைவர் பூலித்தேவர்



பகுதியில் கிறைந்திருந்த காடுகளும் மலைகளுமே யாகும். சங்கர நயினர் கோவில் தாலுக்கா முழுவதி லும் மறவர் தலைவர்கள் நிறைந்திருந்தார்கள். இம்மற வர் தலைவர்கள் அனைவரிலும் கலே சிறந்தவராய் விளங்கிய பூவித்தேவர் இப்பகுதியின் நடுவிடத்தைத் தம் தலைமையிடமாகப் பெற்றிருந்தார். இவரைச் சுற்றிலும் சொக்கம்பட்டி, ஊத்துமலே, தலைவன் கோட்டை, சிவகிரி, சேத்துார் ஆகிய பாளையங்களின் தலைவர்கள் துணேவர்களாயும் தோழர்களாயும் இருந் கார்கள். இவர்கள் யாவரும் மறவர்கள்: 18-ஆம் நூற்றண்டு வரலாற்றில் சிறப்பு வாய்ந்த தலைவர்கள். பக்கம் 420 (6) வாசுதேவநல்லுர் : தொன்மையாய் இந்த இடம் நெற்கட்டுஞ் செவ் வல் பாளையக்காரருக்கு உரிமையானது. இந்நெற் கட்டுஞ்செவ்வல் கோட்டையை 1760-ஆம் ஆண்டில் கான் சாகிபு கைப்பற்ற முயன்ற போது அவன் படுதோல்வி அடைந்தான். இதையடுத்து இவ்விடம் ஆர்க்காட்டு நவாபுவின் கைக்கு வந்தது. ஆனல், இது எப்படி நடைபெற்றது என்பதைக் காட்டுவதற் கான ஆதாரம் இப்போது ஏதும் இல்லை. ஆனால், இந்த இடத்தில் நவாபுவின் ஆளுகை மிகக்குறைந்த காலத்திற்கே இருந்தது. ஏனென்ருல், 6 ஆண்டு களில் மறுபடியும் இந்தப்பாளையக்காரரின் கைக்கே வந்துவிட்டது. 1767ல் கர்னல் காம்பெல் இந்த இடத் கைப் பிடிக்க ஒரு பெரும்படையின் துணே கொண்டு முற்றுகையிட்டான். 650 கெஜ நீளமும்