பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

53



11. அறிஞர் எஸ். சி. ஹில் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய பூசப்கான்-புரட்சித் தளபதி (1914) என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பு: பக்கங்கள் : 39-40 இதற் கிடையில் தக்காணத்தில் புஸ்ஸியின் வெற்றிகளைக் கண்டு கிழக்கிந்தியக் கும்பெனி கலக்க மடைந்துகொண்டிருந்தது. ஒரளவு இக்காரணம் பற்றி என்ருலும் பேரளவு ஹீரானின் படை யெடுப்புத் தன் செலவுகளைத் தானே சமாளித்துக் கொள்ள முடியவில்லை என்பதற்காக ஹீரானேத் திருப்பி அழைக்கக் கும்பினி முடிவு செய்தது. மே மாதம், 2-ஆம் தேதி அவன் மதுரைக்குப் புறப் பட்டான். மூன்றே நாள் படைச் செலவில் அவன் முக்கியமான பாளையக் கா ராாகிய பூலித்தேவர் எனப்படுபவரின் கலேமை நகரமாகிய நெற்கட்டுஞ் செவ்வலுக்கு வந்துவிட்டான். ' கல்லாலும் மண்ணுலும் உறுதியாகக் கட்டப் பட்டிருந்த இக்கோட்டை ஒரு திறந்த சமவெளியில் அமைந்துள்ளது. பீரங்கி சுடும் தொலைவில் அதை மறைத்துக் காக்கும் வகையில் ஒரு சிறு குன்றைத் தவிர வேறு எதுவும் அருகில் இல்லை. கோட்டையின் ஒரு புறத்திற்கு நேர் இணேயாக அறுநூறு கெஜத் துார அளவு ள்ள கண்மாய் (ஏரி)க் கரையொன்று அமைந்து கிடந்தது. மேற்குறிப்பிட்ட குன்றின் பின்னல் எங்கள் படைகள் முகாமி ட் டி ரு ங் த ன. எதிரிப்படைகளைத் திடுக்கிடச் செய்யும்பொருட்டுச் சில பீ ரங் கிக ளே யும் காலாட்படை வீரர்களையும்