பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 சில பகுதி மக்களைத் துன்பத்துக்குள்ளாக்கிய காரணத்தால் அவர்களே அவன் காலத்தில் திரட்டமுடியாமல் போயிற்று. இன்னும் சில பகுதிகளில் அவன் கொடுமையைப்பற்றிய நாடோடிக் கதைகன் வழங்கி வருகின்றன. அவற்றையும் ஊமைத்துரையைப் பற்றி வழங்கும் கதைகளையும் ஒப்பிட்டு நோக்குவது அவசியமாகும். கட்டபொம்மன் திருச்செந்தூரில் தீபாராதனை மணி அடிப் பதைப் பாஞ்சாலங் குறிச்சியில் கேட்பதற்காக, அங்கிருந்து, பாஞ்சாலங்குறிச்சி வரை மணி மண்டபங்கள் கட்டிவைத்தான். அவையாவும் ஒலைக் குடிசைகளே; அவைகளுக்கு வேண்டிய ஒலையையும் பனைமரவிட்டங்களையும் யாரையும் கேட்காமல் வெட்டிக்கொண்டு வந்துவிடுவார்களாம். இதல்ை பனையேறும் தொழிலுடைய நாடர் ஜாதியினர் மிகவும் வெறுப்புக்கொண்டார் கள். இவ்வாறு வெட்டும்போது ஒருமுறை கட்டபொம்மனது வீரர்களுக்கும் குறும்பூர் நாடார்களுக்கும் பெரும் போர் ஏற்பட்ட தென்று கதை கூறுகின்றது. நாடார் ஜனங்கள் கட்டபொம்மன் பக்கம் என்றுமே சேர்ந்ததில்லை. இதுபோலவே கோட்டையைக் கட்டும்போது பள்ளர் ஜாதியைச் சேர்ந்த பெண்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கின னென்றும் அவர்கள் கரண்டைக் காலில் அடித்தார்களென்றும் அவர்கள் மனம் வருந்தி, "அளகுபோல் முதுகிருக்கக் கரண்டைக் காலில் அடித்தானே பாவி’ என்று பாடியதாக நாட்டுப் பாடல்கள் இருக்கின்றன. . செட்டியார் திருப்பணிப்பத்து என்ற ஊரில் ஒரு செட்டியார் இருந்ததாகவும், அவரிடத்தில் வரிப்பாக்கியைக் கேட்ட கட்ட பொம்மன், கொடுக்கமுடியாததால் அவர் முதுகில் கல் ஏற்றி கேவலப்படுத்தியதாகவும், செட்டியார் கட்டபொம்மன் போன பின்பு, தன் சொத்து முழுவதையும் எழுதிவைத்துவிட்டதாகவும் ஒரு கதை வழங்குகின்றது. இக்கதைகள் கட்டபொம்மன் போன்ற பாளையக்காரர்கள் மக்களை நடத்திய விதத்தையும், மக்கள் அவர்களோடு கொண்டிருந்த உறவையும் காட்டப் போது மானவை. ஆகவேதான் கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்தது மக்கள்நலன்களுக்கு உகந்ததாயினும் அவர்கள் தங்களைக் கொடு மையாக நடத்திய கட்டபொம்மனது போராட்டத்தைத் தங்களது போராட்டம் என்று நினைக்கவில்லை. போராட்ட அணியில் சேரவும் இல்லை ஆனல் கட்டபொம்மனது வீரப்போராட்டம் முடிவுற்று, அவன் துர்க்கிலிடப்பட்ட நிகழ்ச்சி மக்களிடையே ஒரு மாறுதலை