பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q போராடினர். குளத்துரர் பாளையக்காரரும், கோல்வார்பட்டி பிரதானி சுந்தரலிங்க நாயக்கரும் துரக்கிலிடப்பட்டார்கள். பிறர் நாடு கடத்தப்பட்டனர். இச் செய்தி சில பாளையக்காரர்கள் கடைசிவரை வெள்ளேயரை எதிர்த்தனர் என்பதைக் காட்டும். இவர்கள் யாவரும் நாயக்கர்கள்’ நாயக்கர் ஆதிக்கத்தை நிறுவ கட்டபொம்மன் முயன்ருன்; தமிழ் நாட்டை அடிமைப் படுத்த முயன்ருன்” என்று ஒருவர் எழுதுகிருர். அது உண்மை யல்ல. வெள்ளையரை எதிர்ப்பவரை அவர் எந்த சாதியினராயினும் தமக்கு ஆதரவாக்கிக் கொள்ள முயன்றிருக்கிருன், உதாரணமாக சிவகாசிப் பாளையப்பட்டோடு அவன் உறவு ஏற்படுத்திக்கொள்ளச் செய்த முயற்சிகளைக் குறிப்பிடலாம். சிவகிரி பாளையக்காரர் வெள்ளையரோடு சமாதானமாகப் போய்விட்டார். அவருடைய குமாரன் மாப்பிள்ளை வன்னியனும், பிரதானி சங்கரலிங்கம் பிள்ளையும் அவரை விலக்கி விட்டு வெள்ளேயரை எதிர்க்க முயன் றனர். தகப்பனர் வெள்ளேயர் உதவி கேட்டார். மகன் பாஞ்சாலங் குறிச்சியின் உதவியை நாடிஞர். கட்டபொம்மன் படையோடு சென்ருன். இது ஒரு குற்றமாகக் கட்ட பொம்மன் விசாரணையின் போது காட்டப்படுகிறது, மாப்பிள்ளை வன்னியரும், சங்கரலிங்கம் பிள்ளையும் தப்பி ஓடி விட்டனர். கடைசியில் வெள்ளையரால் பிடிக்கப்பட்டு பென்கூலன் தீவுக்கு அனுப்பப்பட்டனர். வெள்ளை யரை எதிர்ப்பவர்களைத் தன்ளுேடு சேர்த்துக் கொள்ள வேண்டும், வெள்ளையர் எதிர்ப்பு அணியைப் பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கட்டபொம்மனுக்கு இருந்திருக்கிறது என்பதை இச் சம்பவம் நிருபிக்கிறது. . ஊமைத்துரை விடுதலையான பிறகு நடத்திய போராட்டத் தில், கட்டபொம்மனின் போராட்டத்தில் காணப்பட்ட சில குறைபாடுகளைப் போக்கிக் கொண்டான். அவன் மக்களோடு உறவு கொண்டு அவர்களை வெள்ளையர்களை எதிர்க்கத் திரட்டி ன்ை. 'கோட்டை ஆறு நாட்களில் கட்டி முடிந்தது என்று வெள்ளை அதிகாரிகள் எழுதி வைத்திருக்கிரு.ர்கள். பாளையங் கோட்டையில் சிறையிருந்த 16 பாளையக்காரர்களும், அவர்கள் உறவினர்களும், அல்லது அவர்களே விடுதலை செய்த சிறு படை யினரும் இக்காரியத்தைச் சாதித்திருக்க முடியாது. விடுதலை யடையுமுன்னரே மக்கள் இப்பணிக்காகத் திரட்டப்பட்டிருக்க வேண்டும். கோட்டைக்கு வெளியில் பலவிடங்களில் மக்கள் ஆதரவு இருந்திருக்க வேண்டும். கோட்டை எழுந்ததும் பல பகுதி மக்கள் ஊமைத்துரையை "ஜகவீர கட்டபொம்மு” என ஏற்றுக் கொ ண்டனர். இல்லாவிட்டால், பழைய பாளையப்பட்டு எல்லைக் குள் மட்டுகின்றி வெளியிலும் மக்கள் போரணியில் தி ருக்க