பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$21 கள்ளுச் சாராயங் கலந்தங்கே சோஷர்கள் எல்லோரும் தீன்களருந்தினராம். துள்ளித் துள்ளிக்குதி போடுவராம் சோஷர் மல்லுக் கட்டி விளையாடு வராம். தாகமுந் தீர்ந்து இளைப்பாறிச் சுக்குத் தண்ணிக் குடித்துத் தகையாறி மேகம்போல் சத்த முழங்கிடவே சோஷர் வேகமாய் கவாத்துப் பழகிடவே. 宫盛强伊 தம்பூரு மேளங்கள் வீணைகள் சாலர்கள் சத்தமேகம் போல் முழங்குகின்ருர், கும்பினிப் பாளையம் கெம்பீரமாகவே சம்ரதாயச் சண்டை செய்தனராம் மூஞ்சி முகமுங் கடு கடுத்தார் அங்கே பாய்ந்து பாய்ந்து வெடிசுட்டலுத்தார். பாஞ்சாலங் கோட்டை மேல் வந்து விழுந்ததே பார்மன்னன் அக்கினி மேசர் குண்டு. ஆகாசம் பூமியதிர்ந்திடவே குண்டு ஆர்த்தானே அக்கினி மேசருந்தான். 34 50 ஏகமாய் பீரங்கி குண்டு தைத்து மதில் இடிந்து போகுதே அந்நேரம். மாலைநேரப் பொழு தாகுதென்துமழை மாரியிடிபோல் முழக்கி விட்டான். மூலைக் கொத்தாளந் தகாந்திடவே வெடி முன்னுாறு நானுாறு தானும் விட்டான். அஸ்த மனவேளை யாச்சு தென்று துரை அக்கினி மேசராலோ சினையாய் சித்த மகிழ்ந்திடக் கும்பினிப் பாளையம் சிப்பாகி மார்களைத் தான் பார்த்து 34Gü நிற்கட்டும் சண்டை நிறுத்து மென்ருர் பாரா நேமித்து உசாராக நில்லு மென்ருர், பிற்கட்டு மேசரும் பீரங்கி மேசரும் பின்னுள்ள சோஷர்கள், மல்லர்களும், வேளைக்குவேளை திரகடனே பாரா மெட்டாகப் பட்டாளம் நின்றனராம். நாளைக்கங்கே கன மோடிகளாய்ச் சண்டை நடத்துவோ மென்று தானுரைத்தார்.