பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இப்படி எத்தனை நாளாகத் துரை ஏழெட்டு நாளாய் சண்டை செய்தார்கள். $470 முப்பது நாள் சண்டை செய்தாலும் வெகு மூர்க்கமாய் பீரங்கி சுட்டாலும் பாஞ்சைப் பதியிலே கட்டபொம்மு துரை பவிசுடன் கொலு விருப்பதுவும் நாஞ்சி நாடுமுதல் போரதுவும் வல்ல நாட்டு மலவேட்டை யாடுவதும் வேட்டைகளாடித் திரும்புவதும் தம்பி ஒட்டம் நடைபாய் வருவதுவும் லாட்டு மேலாட்டு வரட்டு மென்று துரை ராஜன் மகிழ்த்து கொலு விருந்தான். 3480 ராத்திரி காலத்தில் தானும் புறப்பட்டு நாடெங்கும் கொள்ளையடிப்பதுவும் பார்த்தாலித்தன கோட்டைக்குள்ளே நேர்த்தியதாகக் கொலுவிருக்கான். பாளையம் வந்திருக்கு தென்று சற்றும் பயமும் எள்ளளவில்லாமல் நாளுக்கு நாள் கொள்ளையடிப்பதுவும் பாஞ்சை நாட்டிலே வந்து கொலு விருப்பதுவும் பீரங்கிச் சத்தம் எழும்பு தென்று மனம் பேதலியாமலே கட்டபொம்மு 3垒姆夺 வீரிய சண்டைகள் செய்வோமென்ருல் ரண வேட்டைக் கெழும்பிட வேணு மென்ருர். இப்படியாகவே கட்டபொம்மு சற்றும் எண்ணுமல் கோட்டைக் குள்ளே இருந்தார். அப்போது கும்பினி அக்கினி மேசரும் ஆலோசனைகளு மேது சொல்வான் ? எத்தனை நாள் சண்டை செய்தாலும் நாமும் எத்தனை குண்டுகள் போட்டாலும் சத்ராதி கோட்டைக்குள்ளே இருக்கான் வலு மித்திர வஞ்சக மாயிருக்கான். 3500 சற்றுங் கவனியாமல் கட்டபொம்மு அவன் சுத்தவிசுவாசி போலிருக்கான். அத்தரி பாணிச்சோத் மாதரிச்சோத் லவுண்டி ஆகட்டும் நாளைக்குப் பார்ப்போ மென்முன்.