பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ஏத்த குதிரையும் கொள்ளையிட்டான் படை எத்தனை பேரையுங் கொன்று போட்டான் - 37 60 கட்டாமி ராசுக்கோல் நில்லென்றுதான் வெடி சுட்டானே சப்தம் பளிரெனவே பட்டாக்கத்தி பளீரிடவே துரை வெட்டுகிருன் படை தானெழிய கத்தியினல் வெட்டித் தான் விழவே அங்கே கட்டபொம்மு தம்பி வந்தெதிர்த்தார். உத்தமனை சிவத்தையா முத்தையா ஒன்று போலக்கத்தி தானெடுத்தார். கத்திகள் தானும் எடுத்ததைக் கண்டந்தக் கர்னல் அக்கினி மேசர் துரை 377 () வெத்திகளாகவே வந்தெதிர்த்தார் செய வீராதி வீரர்கள் தன்னுடனே. கத்தி வெடிகளும் தானெடுத்துத் துரை கண்டதுண்டஞ் செய்ய வேணு மென்று இருவர் படைகளும் தானெதிர்த்து அங்கே ஏகமாய்ச் சண்டை செய்யயிலே ஒருவர்க் கொருவர்கள் தானும் வெட்டியங்கே ஒன்ருேடொன்று சமர் செய்தார்கள். ஊமைத்துரைக்குப் புயத்தில் வெட்டு, அங்கே உச்சிதமா யக்கினி மேசர் கையால் 37&#3 வீமன் கருத்தையா மேலே வெட்டு நல்ல வேடபட்டித்துரை மார்பில்வெட்டு, சின்னத்தளவாய் பெரியதளவாய்க்குக் கன்னத்தில் காயம் கழுத்தில் வெட்டு மன்னவன் சம்பளச் சேனே தளங்களும் வந்து நின்ருர் மனம் நொந்துழைந்தார். அப்போது கருப்பனக் காலாடி தானங்கே சிப்பாகி மார்கள் படையுடனே ஒப்புடனே தப்பி ஓடிப் போகாமலே - உறுதியாகவே நின்று கொண்டான். 3796 அக்கினி மேசருடனெதிர்த்தான் தம்பி அவனடிக்க இவனடிக்க முக்குக்கு முக்கு விரட்டி விரட்டி முடுக்கித் துரத்தியடிக்கையிலே கருப்பன் குடலுஞ் சரிந்த தென்ருன் அந்த காலாடி கையு முறிந்ததென்முன்.