பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ممض مسييه خل பாராக்காரனுஞ் சூழ்ந்திருக்கானங்கே பட்டாள மேசருங் கிட்டே நிற்கான். நீராவிக்125 கரை யோரத்திலே பீரங்கி நிறுத்தி அக்கினி மேசர்தானும் நிற்கான் ஆனநிலிைனி எப்படிப் போவோமென்று ஆலோசனைகளும் செய்தார்கள். தானுபதிப் பிள்ளை யோசனைகள் செய்து தனித்தளப்புகள் ஏது சொல்வார். 3840 கோட்டை வாசல் வழி போகக் கூடாதென்று கொத்தாள நெட்டிலே தானேறி மேட்டு வழியாக ஏணிவைத்திறங்கியே கோட்டையை விட்டு வழி துலக்கி இருட்டு நல்ல இருட்டிலே தானங்கே சறட்டென்று சத்தங் கேளாமல் கறட்டுப் பொட்டிப் பகடையுந் தான் வழி காட்டிக் கூட்டிப் போக முன்னேறி வெளிகள் பார்த்து வெளியேறி சற்றே விரசு கொண்டு நடந்திடவே g 55ひ புளியந் தோப்பு நிழல் வழியே சற்றும் பேசாமற் போறதைப் பாருமையா பாரா மெட்டுகள் தான் கடந்து நல் பாஞ்சைப் பதிக் கோட்டை விட்டகன்று தாராளமாகவே தானடந்து துரை போராரே போராரே கட்டபொம்மு. நட நடவென்று மூர்க்கங் களாய் நல்ல நாகலாதபுரம் மார்க்கங்களாய் விடியக் காலங்களாச்சு தென்று விடி வெள்ளி முளைத்திடும் நேரத்திலே 3.860 நாக லாதபுரம் வந்திறங்கி அங்கே நாலா ஆலோசனை பேசுவாராம் போகலாம் போகலாம் தொண்டைமான் பூமிக்கு போகலாங் காடு வனங்களென்ருர் காளையார் கோவிலுக்காடு சென்று சதிர்க் கம்பிளி போடலாம் தெம்பாக பாளையக்காரத் துரை மகன்தான் நல்ல பாஞ்சைப் பதி மன்னன் ஏது சொல்வார்! பிள்ளை மகன் பிரதானிப் பிள்ளை நல்ல தெள்ளிய வானிங்கே தானிருந்து 3870