பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 இப்படியாகவே கெட்டி செய்து பின்னும் என்ன சொல்வான் துரை அக்கினிசு என்னடா ஊமையன் தன்னையும் காணுேமென்று எண்ணுகிருன் பல யோசனைகள். கன்னிவாடி மலைச்சீமையிலே புலன் கண்டோமென்று சொல்ல த்தான் கேட்டு நாடு நகரு நடுங்கிடவே அங்கே தேடியே போகுதே பட்டாளம். 4 (; 3 (? காடுஞ் செடியும் மல்ைகடந்து அந்தங் கன்னிவாடி மலைச்சார்பினிலே, பாளையம் வந்து இறங்கியங்கே வீர பாண்டியன் ஊமைத்துரையைக் கண்டு யாளிபோல பதினெட்டக் குரோணிப்பட்டாளம் தூளுப் பறக்க மலைங்காட்டில் மல்லர்கள் சோஷர்கள் வெள்ளைக்காரதுரை கல்லு வெடிகளும் தானெடுத்து பல்லுக் கடிகள் நெற நெறென்று சாலைப் பாதையே கூடித் திடுதிடென்று 40 # 0 வந்து வளைந்தே சேந்திருவான் கன்னி வாடி மலையும் கிடு கிடென்ன அந்த நல்வேளையில் ஊமைத்துரைதானும் சந்தோஷ வேட்டைகள் வாய்த்த தென்று சிங்கம் போல் வாய் விட்டெழும்பினனும். வெற்றிச் சங்கம் முழங்கிக் கொண்டேகினனும் சங்கம் முழங்கச் சிவத்தையா தம்பி. வங்காரு நாயக்கர் முத்தையாவும் சின்னவலக்கையன் பெரிய வலக்கையன் சோந்தவீரமல்லு சேருவையும். 4 0 50 கன்னிவாடி மலை வேட்டை வேட்டை என்று கட்டையன் மொட்டைப் பகடையுடன் மைத்துண்ணுகிய முத்தன் பகடையும் மட்டுக்கடங்காத மொட்டையனும் கத்திகளாஞ் சுருட்டுக்கத்திகளாம் பட்டாக் கத்தி யெடுத்துக் கைவீசிக்கொண்டு துண்ட ரீகமான ஊமைத் துரைராஜன் மண்டிவருவதைப் பாருமையா. மண்டிவரிசைகள் போட்டு திடீரென்று சண்டு பறக்க மலைக்காட்டில்