பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 5 வுடமை முறையே அமுலில் இருந்தது. ஜாதிப்பிரிவுகள் பொரு ளுற்பத்தியை பலவீனப் படுத்தின. பொருளுற்பத்திச் சக்திகள் வளர்ச்சி பெறவில்லை. அச்சக்திகள் வளர்ந்திருந்தால் பாளையப் பட்டுகள் இணைந்து ஒரு முதலாளித்துவ நாடு தோன்றியிருக்கும். அதற்குரிய நிலைமை தமிழ் நாட்டில் இல்லை. ஆங்கிலேயர்கள் முதலாளித்துவம் வளர்ச்சியுற்ற நாட்டிலிருந்து வந்தவர்கள், ஐரோப்பாவில் முதலில் தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒன்று இங்கிலாந்து. உற்பத்தி சக்தியின் வளர்ச்சியால் விற்பனைப் பொருட்கள் குவிந்தன. அவற்றிற்கு சந்தை நாடி அவர்கள் இந்தியாவுக்குள் வந்தனர். தென்னுட்டில் அவர்கள் வியாபாரத் தொடர்பு கொள்ளும் போது, இங்கிருந்த பலவீன நில உடமை அமைப்பிற்கும், வெளிநாட்டிலிருந்து வந்த முதலாளித்துவ அமைப்பிற்கும் மோதல் ஏற்பட்டது. அவர்களுடைய பொருட் கள் விற்பனையாகி லாபம் தருவதற்கு உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் போட்டியைச் சமாளித்தார்கள். அவர்களிடம் கப்பல்கள் இருந்தன. உள்நாட்டுப்பொருள்களை வாங்கிக் கொண்டு செல்லவும், அதன் மூலம் உள்நாட்டு வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தவும் முடிந்தது. அக்காலத்தில் அரசியல் சூழ்நிலை காரண மாக அவர்கள் ஆதிக்கம் பெறவும் தலைப்பட்டார்கள். நாட்டை ஒரே சந்தையாக இணைக்கக் கும்பினி நாணயப் புழக்கத்தை புகுத்தினர்கள். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப் படுத்தினர்கள். இச் சுரண்டலின் விளைவுகளை எதிர்த்த மக்களையும், பாளையக்காரர்களையும் அடக்கினர்கள். அடக்கு வதற்கு அவர்களிடம் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி காரண மாகத் தோன்றியிருந்த பீரங்கிகளும், துப்பாக்கிகளும் குண்டு களும் இருந்தன. அவர்களை எதிர்த்த பாளையக்காரர்களிடம், வாள்களும், ஈட்டிகளும், அம்புகளும் தான் இருந்தன. இவற்றை வைத்துக் கொண்டு உள்ளேயே பல பலவீனங்கள் நிறைந்த ஒரு சமுதாய அமைப்பைப் பாதுகாக்க வலிமை மிக்க, முதலாளித்துவ அமைப்பில் ஒரு பகுதியான கும்பினியை அவர்கள் எதிர்த்தார்கள். ல் வெற்றி யாருக்கு என்பதை இந்நிலமையைப் புரிந்து வர்கள் ஐயமற சொல்லி விடலாம். வெற்றி வெள்ளை னும் பிற்காலத்தில் நடந்த விடுதலைப் போராட்டத்தில் ன், ஊமைத்துரை, பூலுத்தேவர், மருது சகோதரர் லிய பாளையக்காரர்களின், வெள்ளையர் எதிர்ப்புப் . تقنن