பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 : மீனுட்சிசுந்தரனர் அவர்களுக்கும் பல்கலைக்கழக சிண்டிகேட் சபைக்கும் எனது நன்றி. இதுபோன்றே இன்னும் சில நாட்டுக் கதைப் பாடல்களை அவர்கள் வெளியிட முன்வந்திருப்பது தமிழ் நாட்டுப் பாடல் துறைக்கு அவர்கள் செய்திருக்கும் சிறந்த நற்பணியாகும். கட்டபொம்மு கதைப் பாடல் பிரதிகள் பல எனக்குக் கிடைத்தன. அவற்றுள் முழுமையான வடிவத்தில் கிடைத்த பிரதியைப் பின்பற்றி இந்நூல் பிரதி செய்யப்பட்டுள்ளது. இப்பிரதியை எனது நண்பர் ஒணமாகுளம் பெருமாள் அழகிய கையெழுத்தில் எழுதித் தந்ததோடு, பாமரவழக்குச் சொற்கள் பலவற்றிற்குப் பொருளும் கூறினர். இக்கதை நடந்த பகுதியில் வாழ்பவராதலால், அப்பகுதியில் வழங்கும் வழக்குத் தமிழ்ச் சொற்கள், பழமொழிகள் உணவு வகைகள் முதலியன பற்றிக் குறிப்புகள் எழுத விவரங்கள் கூறினர். அவருக்கு எனது நன்றி. பாளையங்கோட்டை, நா. வானமாமலை, 2 I-9-70. பதிப்பாசிரியர்.