பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மென் கைப்பற்றி விலை உயர்ந்த பொருள்களை விற்றுவிட்டு, பத்திரங்களையும், பட்டயங்களையும் அழித்துவிட்டான். பாஞ் சாலங்குறிச்சிப் பாளையத்திற்குச் சொந்தமான தொண்ணுற்ருறு. கிராமங்களையும், எட்டயபுரத்தாருக்கு கும்பினியார் உரிமையாக்கி விட்டார்கள். நிலங்களே சர்வே செய்து நிலப்படம் வரையும் பொழுது பாஞ்சாலங்குறிச்சி முழுவதும் பாழ் நிலம் என்று காட்டப்பட்டது. இவ்வாறு பாஞ்சாலங்குறிச்சி வீரர்களுக்கு ஆதாரமான சரித்திரச் சான்றுகள் அனைத்தும், எதுவும் மிஞ்சாமல் அழிக்கப்பட்டன. ஆனல் இவ்வழிவுச் செயல்களினல்-கட்டபொம் மனின் நினைவை அகற்ற முடியவில்லை. அதற்குக் காரணமென்ன ? பாளையக்காரர்கள் அனைவரும் பணிந்த பின்பு வெள்ளேயரை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த கட்டபொம்மனது தியாகம் மக்களிடையே எழுச்சியை உண்டாக் கியது. இவ்வெழுச்சி பரவி விடுதலைப்படை திரண்டது. இப் படை பாளையங்கோட்டையில் காவலிலிருந்த ஊமைத்துரையை விடுவித்தது. மறு படி யும் விடுதலைப்போர் தொடங்கியது. வெள்ளையரின் ஆயுதபலம் கோட்டையை அழித்தது. வீரர்கள் சிறைப்பட்டனர். ஊமைத்துரை தப்பிச் சென்று மருது சகோதரர் களோடு சேர்ந்து மறுபடியும் போராடினன். மீண்டும் வெள்ளையர் ஆயுத பலம் வெற்றி பெற்றது. ஊமைத்துரை தாக்கிலிடப்பட் டான். அவனது தியாகம் மக்களது நினைவில் நின்றது. சரித்திரச் சான்றுகளெல்லாம் அழிக்கப்பட்ட பின்னரும் கூட மக்கள் வாயை வெள்ளையரால் அடக்க முடியவில்லை. அவர்கள் வீரர்களது கதை களைச் சொன்னர்கள். இவ்விர வரலாற்றைப் பாட்டாகப் பாடி ஞர்கள். இக்கதைகளும் பாடல்களும் தமிழ்கத்தின் தென்பகுதி முழுவதும் பரவின. வழிவழியாக வந்த இக்கதைகள் கூத்தாக நடிக்கப்பட்டன. கூத்துக்களை வெள்ளேயர் ஆட்சி தடை பாட்டும் கதையும் சாகவில்லை. இவ்வாறு மக்கள், னேவைப் பாதுகாக்க எழுப்பிய நினைவுச் சின் ள ாடல்களே ஆகும். அவை சரித்திரச் ச ا۔ கு என்ன என்று எடுத்துக்காட்டும் சாதனங்