பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ÁI I ; قبي. சாகிசன் சொல்லுஞ் சமாச்சாரமது சாடை அறிந்தானே பிள்ளை மகன் ஒகோயி தென்ன கொடுமை யென்ருன் இப்போ ஆகாத பேச்சுப் பிறக்கு தென்ருன் | 27 (; புன்ன விதியாய் யிருக்கு தய்யோ துரைகள் சன்னைகள் செய்கிருன் மோச மய்யோ சின்னத் தனமாயிருக்கு தய்யோ நாமுஞ் செய்யுஞ் சமர்த்து களெப்படியோ தன்னிமையாக" வரவுஞ் சொல்லி யிந்தச் சற்பினை செய்தானே சாகிசனும் அன்னியாயமாக யிருக்கு தய்யோ யிங்கே யின்னமும் நிற்கக் கூடாதே யென்ருன் அந்த சமாச்சாரங் கட்டபொம்மு கேட்டு யிந்தச் சணம் வெளியேறென்று 1280 எந்த விதம் வெளியேறுவது நாமும் சந்திப்புக்கு வந்த நேரமது பொல்லாங்கு மெத்தவே வந்த தென்ருர் கட்ட பொம்மு துரையும் மனது நொந்தார் அல்லல் வரு மென்று கோபாலையருங் கண்ணுல் சிமிட்டியே போகு மென்ருர் வேகமாய் கட்ட பொம்மேந்திர துரை மேல் வீடு விட்டு வெளியேறி நின்ருர் போகாதே யென்று சாகிசன் மேசர் கட்ட பொம்மு மடிபிடித்தே யிழுத்தான் 1290 அப்போது கட்டபொம்மேந்திர துரையுமே ஆலகால விடம் போலச் சினந்து டப்பை யெழுபத்தி ரெண்டு துரைகளும் கட்டபொம்மு முந்தி தொட்டதில்லை இப்போது கும்பினிச் சட்டதிட்டப்படி யென் முந்தி பற்றியே தொட்டிழுத்தாய் தப்பிதஞ் செய்யாதே சாகிசன் மேசரே யிங்கு சல்லியம் பண்ணுதே விட்டி டென்ருர் முந்தியைப் பற்றி இழுக்காதே பாவி மோசங்கள் வந்து சேரு மென்ருர் 1300 சந்திப்புச் செய்யவும் வந்ததற்கு யெனக் கிந்த மரியாதை போது மென்ருர்